வேலை...வேலை...வேலை...(22/12/2020)

இந்திய அணுசக்தி துறையில் வேலை, தென்மேற்கு ரயில்வேயில் வேலை, விமானப்படையில் வேலை 
வேலை...வேலை...வேலை...(22/12/2020)
Updated on
3 min read

இந்திய அணுசக்தி துறையில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 74
பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு - II - 2 
சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள்.
பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு - III - 04
பணி: அப்பர் டிவிஷன் கிளார்க் -5
பணி: ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டன்ட்/ ஜூனியர் ஸ்டோர்கீப்பர் -63
சம்பளம்: மாதம் ரூ.25,500 + இதர சலுகைகள்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், வணிகவியல், அறிவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது பொறியியல் துறையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் படிப்பு தொடர்புடைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 27.12.2020 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: https://dpsdae.formflix.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://dpsdae.formflix.in/notification.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.12.2020

தென்மேற்கு ரயில்வேயில் வேலை
பணி: ஸ்போர்ட் பெர்சன் (ஸ்போர்ட்ஸ் ஒதுக்கீடு)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தபட்சம் மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி, கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை கிராஸ்டு இந்தியன் போஸ்டல் ஆர்டர் -ஆக செலுத்த வேண்டும். Indian Postal Order}I Assi.Personnel Officer/HQ & Genl, South Western Railway, Hubbali என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 
முகவரி: The Assistant Personnel Officer/HQ&Genl., Railway Recruitment Cell,2nd floor,Old  G.M.'s Office Building,Club Road,Hubballi - 580023 
 மேலும் விவரங்களுக்கு: https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பாருங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 28.12.2020

விமானப்படையில் வேலை
தேர்வின் பெயர்: AFACT
பணி: கமிஷனெட் ஆஃபிசர் 
காலியிடங்கள்: 235
வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 20 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். டிஜிசிஏ -ஆல் வழங்கப்பட்ட கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். விமானப்படையின் கிரவுண்ட் டூட்டி பணிக்கு 20 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
தகுதி: கணித பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் போன்றவற்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரி 2021-இல் பயிற்சி ஆரம்பமாகும். தேர்வுக்கான அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும். 
பயிற்சி அளிக்கப்படும் காலம்: விமானப்படையில் ஃபிளையிங் பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 74 வாரங்களும், கிரவுண்ட் டூட்டி பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையின் பயிற்சி வழங்கப்படும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். என்சிசி - ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_10_2021b.pdf என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.12.2020

ரேடியோ வானியல் மையத்தில் வேலை
நிறுவனம்: ரேடியோ அஸ்ட்ரானமி சென்டர் (ஆர்ஏசி), ஊட்டி 
மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: என்ஜினியர் ட்ரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) - 02
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி: சயின்டிபிக் அசிஸ்டண்ட் - பி (கம்ப்யூட்டர்ஸ்) - 01
வயது வரம்பு: 43 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி: டெக்னிகல் ட்ரெய்னி (எலக்ட்ரிகல்) - 01
பணி: டெக்னிகல் ட்ரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) -02 
பணி: டிரேட்ஸ்மேன் - பி - எலக்ட்ரானிக்ஸ் - 01
பணி: ஒர்க் அசிஸ்டன்ட் (லெபாரட்டரி ) -01
பணி: ஒர்க் அசிஸ்டன்ட் (மெகானிக்கல் ) - 01
பணி: செக்யூரிட்டி கார்ட் -2
பணி: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ட்ரெய்னி -02 
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, அடிப்படைத் கல்வி தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய: http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2020-2 என்ற இணையதள அறிவிப்பில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2020
- இரா.வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com