விழிப்புணர்வு ஆடை!

கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பெண்கள் அணியும் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
விழிப்புணர்வு ஆடை!

கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பெண்கள் அணியும் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

உலகளாவிய நோய்த்தொற்றான கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் சுமார் 7.5 லட்சம் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில், தமிழகத்திலும் 1.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கஸ்ட்யூம் டிûஸன் அண்டு பேஷன் 2 - ஆம் ஆண்டு மாணவர் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இந்த ஆடையை வடிவமைத்த மாணவர் தண்டபாணி கூறியதாவது:

""கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆடை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டேன். இதன்படி சில்க் காட்டன் மற்றும் காடா துணியால் இந்த ஆடையை வடிவமைத்துள்ளேன். இதில், கரோனாவின் அறிகுறிகள், சளி, முகத்தில் நீர்த்துளிகள் படுவது, தொண்டை வலி, கைகொடுப்பது, இருமல், காய்ச்சல் போன்றவற்றை ஆடையில் பெயிண்டால் வரைந்துள்ளேன். அதே போல், ஆடையின் மற்றொரு பகுதியில் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அடிக்கடி கைகழுவுதல், வணக்கம் சொல்லுதல், தனிமைப்படுத்தில் கொள்ளுதல், மருத்துவரை அணுகுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், டிஸ்யூ பேப்பரை உபயோகப்படுத்துதல் குறித்தும் பெயிண்டால் வரைந்துள்ளேன். மேலும், ஆடையில் கரோனாவின் உருவம் குறித்தும் எம்பிராய்டரிங்கில் வரைந்துள்ளேன். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் இந்த ஆடையில் குறிப்பிட்டுள்ளவாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு கரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

மாணவனின் இந்த புதிய முயற்சியை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com