மனமும் புத்தகமும்

இ ந்த பிரபஞ்சத்திலேயே மிக மிக அற்புதமான உபகரணம் நம் எல்லாரிடமும் இருக்கிறது.
மனமும் புத்தகமும்
Published on
Updated on
1 min read

இந்த பிரபஞ்சத்திலேயே மிக மிக அற்புதமான உபகரணம் நம் எல்லாரிடமும் இருக்கிறது. அதை உபயோகிக்கவும் நம்மிடமே சாவியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சாவிதான் புத்தகம் என்ற அற்புதம்.

மனிதன் கண்களுக்குத் தெரிகிறான். அவன் மனம் கண்களுக்குத் தெரிவதில்லை. புத்தகம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் உள்ள கருத்துகள் படிக்காமல் நமக்குத் தெரிவதில்லை. மனம் பயன்பாட்டுக்கு வரும்போது உலகில் பலப் பல முன்னேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. புத்தகங்களைப் படிக்கும்போதும் பலப்பல முன்னேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. மனதில் பல கோடி விசயங்கள் மறைந்து இருக்கின்றன. புத்தகங்களிலும் பல கோடி விசயங்கள் மறைந்து இருக்கின்றன. இந்த இரண்டும் வேறு வேறா அல்லது ஒன்றா என்றால் ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கின்றன; இயங்குகின்றன.

நல்ல மனதைத் திறக்க பயன்படுத்த ஒரு நல்ல புத்தகம் தேவைப்படுகிறது. நல்ல புத்தகம் ஒன்றை உருவாக்க, திறக்க பயன்படுத்த ஒரு நல்ல மனம் தேவைப்படுகிறது. நல்ல புத்தகங்களைப் படித்தவன் நல்ல மனம் படைத்தவனாக இருக்கிறான். நல்ல மனம் படைத்தவன் நல்ல புத்தகங்களை உருவாக்குகிறான். நல்ல மனதிற்கும் நல்ல புத்தகங்களுக்கும் இடையே பல கோடி மக்கள் புத்தகம் என்றால் என்ன என்று உணராமலேயே , தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைகிறார்கள்.

நமது நாட்டில் கல்வி மனிதனின் அடிப்படை உரிமையாக இருக்கும்போது, 2018- இன் யுனெஸ்கோ கணக்கெடுப்பின்படி, 287 லட்சம் படிக்காத வயது முதிர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் என்ன செய்வது? நல்ல மனிதர்களைத் தெரிந்து கொள்ள நமக்குப் புத்தகங்கள் உதவுகின்றன. நல்ல புத்தகங்களைத் தெரிந்து கொள்ள நல்ல மனிதர்கள் உதவுகிறார்கள். புத்தகங்களை மனம் திறக்காமல் பயன்படுத்த முடியாது. ஒன்றைத் திறக்கும்போது மற்ற ஒன்றும் தானே திறக்கிறது. ஒன்றை மூடும்போது மற்ற ஒன்றும் தானே மூடுகிறது.

ஏ.மோகனராஜூ எழுதிய "புத்தகம்' என்ற நூலிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com