கண்ணுக்குத் தெரியாத கருவி!

பல்வேறு காரணங்களால் காது கேட்கும் திறன் சிலருக்குக் குறைந்து கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் ஹியரிங் எய்ட் கருவியைப் பொருத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுவிடுகிறது.
கண்ணுக்குத் தெரியாத கருவி!

பல்வேறு காரணங்களால் காது கேட்கும் திறன் சிலருக்குக் குறைந்து கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் ஹியரிங் எய்ட் கருவியைப் பொருத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அதைப் பொருத்திக் கொண்டால், அதைப் பார்ப்பவர்கள் அனைவரும் அவருக்குக் காது கேட்காது என்று தெரிந்து கொள்வார்கள். இதனால் செவித்திறன் குறைந்தவர்கள் மனதில் காயம் ஏற்பட்டுவிடுகிறது.

சில ஹியரிங் எய்ட் கருவிகளில் வயர்கள் இருக்கும். கருவியை இயங்கச் செய்யும் பேட்டரியுடன் அந்த வயர்கள் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் பெரிய தொல்லை என்று நினைப்பவர்களுக்கு சிக்னியா என்ற நிறுவனம் தயாரித்து அளித்துள்ள கருவிதான் Signia Nx என்ற ஹியரிங் எய்ட் கருவி.

இந்த ஹியரிங் எய்ட் கருவியை அணிந்து கொண்டால் யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே உள்ள ஹியரிங் எய்ட் கருவிகளை விட மிகமிகச் சிறியது இந்தக் கருவி. வயர்லெஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஒருவர் இந்தக் கருவியை அணிந்திருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதனால் இதனை அணிந்திருப்பவர் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் இன்றி இயல்பாக இருக்க முடிகிறது.

இந்தக் கருவியின் மூலம் வெளிப்புற ஒலிகளை எந்தவித மாறுபாடும் இன்றி கேட்க முடியும். செல்லிட பேசிகள் அதிகமாகிவிட்ட இக்காலத்தில் இந்த ஹியரிங் எய்டை அணிந்தவர் செல்லிட பேசியை ஒரு காது அருகில் வைத்துப் பேசினாலும், இரண்டு காதுகளிலும் உள்ள ஹியரிங் எய்ட் கருவிகளில் கேட்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com