வாங்க இங்கிலீஷ் பேசலாம் 231

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 231

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி வரலாற்றுப் புதினங்களைத் தொடர்ந்து எழுதி மனம் பேதலித்துப் போனவர். தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அவருடன் இருவரும் சம்பாஷணையில் ஈடுபட்டு இரவைக் கழிக்கிறார்கள். அப்போது ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் 
கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாக சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். பதில் தெரியாவிட்டால் lifeline எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டு அவன் பதிலை சரியாகச் சொல்கிறான். இப்போது lifeline என்ற சொல்லின் வரலாறு என்ன எனும் கேள்வி எழுகிறது.
வீரபரகேசரி: என்ன பதில் தெரியவில்லையா? 
கணேஷ்: இதற்கு கண்டிப்பாக பதில் அளித்தே ஆகணுமா? 
வீரபரகேசரி: என் நாட்டில் யாருக்கும் சாய்úஸ இல்லை. 
கணேஷ்: lifeline ... lifeline ... இப்போது நினைவுக்கு வந்து விட்டது. அது ஒரு கயிறு. படகுகளில் பயணிக்கிறவர்களை, அதில் துடுப்பு போடுகிறவர்களை கீழே விழுந்து விடாமல் பிணைத்து வைக்கிற கயிறு. அதுவே அவர்களின் உயிரைப் பல சமயங்களில் காப்பாற்றும் உபாயம் என்பதால் அதற்கு இந்தப் பெயர் வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஆங்கிலத்தில் இது வேறு பொருளில் புழக்கத்தில் இருக்கிறது. 
வீரபரகேசரி: அது என்ன? 
கணேஷ்: ஒரு சிக்கலான, இக்கட்டான பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கான மார்க்கம் அல்லது உதவிக்கு அப்போது வரக் கூடிய ஆள். வேறெதுவும் சரிவரவில்லை என்றால் அவர் வருவார்; அவரை அழைக்கலாம். 
மகாபாரதத்தில் திரெளபதிக்கு கிருஷ்ணனைப் போல. 
வீரபரகேசரி: சபாஷ், நல்ல உதாரணம். ஆனால் தம்பி... இதோ பார் (தன் உள்ளங்கையைத் திறந்து அபயமுத்திரைக் காண்பிக்கிறார்) எனக்கு பல ஆபத்துகள் நேர்ந்துள்ளன, எதிரிநாட்டு மன்னர் என்னைக் கொல்ல அனுப்பிய ஏவலாள்களிடம் இருந்து தப்பியிருக்கிறேன். ஜனங்களைத் திணறத் திணற கொடுமைப்படுத்தி விட்டு தேர்தலில் அவர்களின் ஆதரவைப் பெருவாரியாகப் பெற்றிருக்கிறேன். அதற்குக் காரணம் இதோ நீ குறிப்பிடுகிற இந்த ப்ண்ச்ங்ப்ண்ய்ங் தான். 
கணேஷ்: அப்படியா? 
வீரபரகேசரி: ஆமாம், அது என்ன? 
கணேஷ்: ஐயய்யோ இதுவும் ஒரு கேள்வியா? இதுவரை எதோ ஒரு பத்திரிகையில் படிச்ச துணுக்கை வைத்து இந்த கேள்வியைச் சமாளிச்சிட்டேன். இது என்ன புதுசா? 
(புரொபஸரிடம்) சார் காப்பாத்துங்க. 
புரொபஸர்: நான் ஒண்ணு தான் சொல்வேன் ... நீ பார்த்தது தான் கேள்விக்கான பதில். 
கணேஷ்: பார்த்ததா? பார்த்ததா? ஐயோ குழம்புதே. என்ன பார்த்தேன்? ஞாபகம் வந்திருச்சு. 
புரொபஸர்: என்ன? 
கணேஷ்: அபயமுத்திரை. அதை அவர் சற்று முன் காட்டினாரே? 
புரொபஸர்: உனக்கு அது தான் நினைவுக்கு உடனே வருகிறதென்றால் நீ அதை வைத்து பதிலைக் கண்டுபிடி. இதற்கு மேல் நான் குறுக்கிட மாட்டேன். சாரி... 
கணேஷ்: ம்ம்ம்... 
வீரபரகேசரி: ரெண்டாவது கேள்வியிலே பல் இளித்து விட்டதே. மந்திரியாரே... 
மந்திரி: மன்னர் மன்னா? 
வீரபரகேசரி: இவன் தலையை முதலில் பாறாங்கல்லை வைத்து சிதைத்து விட்டு பிறகு கழுத்தை வெட்டு. 
மந்திரி: அதற்கு முன் மிளகாய்ப்பொடியைக் கண்ணில் தூவட்டுமா? 
வீரபரகேசரி: நீ மிளகாய்ப் பொடியிலே இரு. நம்முடைய தண்டனை முறைமை manuel ஐ நீ சரியாக படிக்கவில்லையா இன்னும். இன்றிரவு தூங்கும் முன்பு அதை ஆயிரம் முறை மனனம் பண்ணு. எனக்கு இங்கே கேட்கணும். 
மந்திரி: இன்னிக்கு தூக்கமும் போச்சா? I am gonna lose my sleep over this.
வீரபரகேசரி: உனக்கு வெட்கமாயில்லை. Lose sleep over something என்றால் ஒரு விசயத்தை நினைத்து அதிகமாய் கவலைப்பட்டு தூங்க முடியாமல் போவது. வெறுமனே தூங்காமல் இருப்பதல்ல. 
ஆங்கிலமும் தெரியாது... அமைச்சுப்பணியும் தெரியாது. Having you as my minister is a millstone around 
my neck. கணேஷ்! 
கணேஷ்: ஐயோ! 
வீரபரகேசரி: நான் கடைசியாய் பயன்படுத்திய idiomatic expression -இன் அர்த்தம் தெரியுமா? 
கணேஷ்: ஓ... தெரியுமே. புரொபஸர் அடிக்கடி வகுப்பில் இதைப் பயன்படுத்தி அலுத்துப்பார். 
வீரபரகேசரி: அது போதாது. இது எப்படி தோன்றியதென்றும் நீ சொல்லணும். ரெண்டு கேள்விகளுக்கும் சேர்த்து சொல்லு.?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com