வாங்க இங்கிலீஷ் பேசலாம் 232 - ஆர்.அபிலாஷ்
By DIN | Published On : 03rd March 2020 09:03 AM | Last Updated : 03rd March 2020 09:03 AM | அ+அ அ- |

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி வரலாற்றுப் புதினங்கள் தொடர்ந்து எழுதி மனம் பேதலித்துப் போனவர். தன்னை சோழப்பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அவருடன் இருவரும் சம்பாஷணையில் ஈடுபட்டு இரவைக்கழிக்கிறார்கள். அப்போது ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். அப்போது millstone around the neck Gàm idiomatic expressionஇன் பொருள் என்ன எனும் கேள்வியை வீரபரகேசரி எழுப்புகிறார். இந்த கேள்வி அவர் கேட்டுக்கொண்டிருக்கும் பத்து கேள்விகளில் ஒன்று.
கணேஷ் தலையைச் சொறிகிறான்: சார், யாராவது கேள்வி கேட்டா தான் என் மூளை விழிச்சிக்குது. பரபரன்னு யோசிக்குது. அதுவரைக்கும் தெரியாதது எல்லாம் ஸ்விட்சு போட்டு பல்பு எரியிற மாதிரி தெரியுது.
புரொபஸர்: பரீட்சை எழுதும் போது எல்லாம் புதுசா படிச்ச மாதிரி, கேள்விப்படுற மாதிரி இருக்குமே, அதைச் சொல்றியா?
கணேஷ்: சார் ... இதோ பாருங்க, கரெக்டா பதில் சொல்றேன், millstone around the neck என்றால் ... ஒரு தவிர்க்க முடியாத தொந்தரவாக பொறுப்பு அல்லது தப்பிக்க முடியாத பிரச்சனை.
வீரபரகேசரி: என்ன புரொபஸர் இவனோட பதில் சரியா?
புரொபஸர்: Absolutely!
வீரபரகேசரி (கணேஷிடம்): Am I a millstone around your neck?
கணேஷ்: இதுக்கு சரியான பதில் சொன்னா என்னாகும்?
புரொபஸர்: நூறு கசையடி கொடுப்பான்.
கணேஷ்: ஏன் சார்?
புரொபஸர்: மன்னரைப் போய் தவிர்க்க முடியாத தொந்தரவுன்னு சொல்லலாமா? என்னதான் அது உண்மையாக
இருந்தாலும்.
கணேஷ்: தப்பான பதில் சொல்லவா?
புரொபஸர்: You will be beheaded. தலை வேண்டாமா?
கணேஷ்: சரி... சமாளிக்கிறேன் பாருங்க.
வீரபரகேசரி: ம்ம்ம்... என்ன அங்கே குசுகுசுக்கிறாய்?
கணேஷ்: மன்னர் மன்னா you are not a millstone around the neck, rather you are a garland around our necks!
புரொபஸர்: ஆஹா! சபாஷ்!
வீரபரகேசரி: Donot sweet talk me! ஆனால் அது நல்ல பதில் தான்.
கணேஷ்: அதென்ன சார் sweet talk?
புரொபஸர்: அதுவா? ஜால்ரா அடிக்கிறது. காரியம் சாதிக்கிறதுக்காக பொய்யாகப் புகழ்வது.
வீரபரகேசரி: ஆனால் இத்தகைய smoothies அவர்களுக்கு என் தேசத்தில் வரையறுக்கப்பட்ட இடம் உள்ளதால் எந்த பிரச்னையும் இல்லை. அதாவது ஜால்ராவுக்கு என் நாட்டில் இடமேஇல்லை.
கணேஷ்: புரியவில்லை மன்னா.
வீரபரகேசரி: ஜால்ரா அடிப்பவர்களே இல்லை என்கிறேன். உதாரணமாக (கையைக் கட்டிக் கொண்டு நிற்கும் ஒரு அதிகாரியை அழைக்கிறார்) டேய் இங்கே வா.
அதிகாரி: மன்னர் மன்னா! தங்களுக்கு அடிபணிகிறேன். தங்கள் கட்டளையை சிரமேற்கொள்கிறேன். தங்களைப் புகழ்ந்து பா புனைவதும் வானளாவ தங்களைப் போற்றி கதைகள், காவியங்கள் புனைவதுமே என் பணி. அதைத் தவிர நான் வேறெதையும் செய்வதில்லை.
வீரபரகேசரி: சரி... போ...
அவர் சென்று மூக்கை நோண்டுகிறார்.
வீரபேரகேசரி: டேய்... இங்கே வா.
அதிகாரி திரும்பவும் வந்து: மன்னர் மன்னா! தங்களுக்கு அடிபணிகிறேன். தங்கள் கட்டளையை சிரமேற்கொள்கிறேன். தங்களைப் புகழ்ந்து பா புனைவதும்...
வீரபேரகேசரி: சரி... சரி... போ. (அதிகாரி திரும்பவும் வந்த இடத்துக்கு சென்று மூக்கை நோண்டுகிறார்.) அவ்வளவு தான். நான் கேட்காத போது he won’t sweet talk. இதனால் நான் கேட்காத போது என் தேசத்தில் யாருமே ஜால்ரா அடிக்க மாட்டார்கள். இதனால் என் நாட்டில் பொய்யும் புரட்டும் இல்லவே இல்லை. அதாவது ...
புரொபஸர்: அன்றாட வாழ்வில் யாருமே பொய் பேச மாட்டார்கள். கூலிக்கு மட்டுமே பொய் கூறப்படும்.
வீரபேரகேசரி: ஆம், அதுவே தான்.
கணேஷ்: இது மிக நல்ல சிஸ்டம் மன்னா. பொய்யை ஒழித்துக் கட்ட இதை விட சிறந்த வழியில்லை.
வீரபேரகேசரி: ஆம். டிவி விவாத நிகழ்ச்சிகளில் கூட ஒன்று என் ஆதரவாளர்கள் நேரடியாக இருப்பார்கள், அல்லது என் அங்கீகாரம் பெற்ற எதிரிகள் இருப்பார்கள். நடுநிலையாளர்கள் எனும் பொய்யர்களே கிடையாது. சரி, millstone around neck என்பதன் வரலாறு என்ன?
கணேஷ்: விவிலியம் மன்னா, கர்த்தர் ஒருமுறை என் பிள்ளைகளை மதிக்காத பெற்றோர்களை கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் வீசுவேன் என்றார். அப்படித் தான் ஒரு தவிர்க்க முடியாத பிரச்னையை கழுத்தில் கட்டப்பட்ட கல் எனும் பொருளில் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.
(இனியும் பேசுவோம்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...