சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 88

பிரிட்டனில் நர்சிங் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு பிரிவுகளில் உள்ளன என்பதை சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில நர்சிங் பிரிவுகளைப் பார்ப்போம். 
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 88

பிரிட்டனில் நர்சிங் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு பிரிவுகளில் உள்ளன என்பதை சென்றஇதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில நர்சிங் பிரிவுகளைப் பார்ப்போம்.
கம்யூனிடி அட்வான்ஸ் பிராக்டிஷனர்: பல்வேறு மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கிய பிரிவு இது. இந்தத் துறை சார்ந்த செவிலியர்கள் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டுகளுடன் சேர்ந்து வேலை செய்வார்கள்; பிஸியோ தெரபிஸ்ட்டுகளுடன் சேர்ந்து வேலை செய்வார்கள்; நர்சுகளுடன், இதர மருத்துவமனைப் பணியாளர்களுடன், மருந்தியல்துறையினருடன் இணைந்து வேலை செய்வார்கள். அதுமட்டுமல்ல, சமூக நலன் சார்ந்து வேலை செய்பவர்களுடனும் இணைந்து வேலை செய்வார்கள். பொது நல மருத்துவத்தில் ஆர்வமுடையவர்களாகவும், நல்ல தகவல்தொடர்புத் திறன் உள்ளவர்களாகவும், வேலைக்கு முன்னுரிமை தருபவர்களாகவும் இத்துறை சார்ந்த செவிலியர்கள் இருப்பார்கள். அனைத்துப் பிரிவினருடனும் இணைந்து பணியாற்றும் திறமை, ஒருங்கிணைக்கும் திறமை இவர்களுக்கு உண்டு. பல பகுதிகளுக்குச் சென்று பொது நல மருத்துவத்தில் ஈடுபடுவார்கள்.

தியேட்டர் பிராக்டிஷனர்(அனஸ்தெடிக்ஸ்): அறுவைச் சிகிச்சைக்கு ஒரு நோயாளி வருவதற்கு முன்பு அவர் எதற்காக அறுவைச் சிகிச்சைக்கு வருகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் உடல் நிலை குறித்த எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டு, அறுவைச் சிகிச்சை செய்யும் குழுவினருடன் இணைந்து, அந்த நோயாளிக்கு மயக்க மருந்து தரக்கூடிய பணியாளர்களுடன் கலந்தாலோசித்து, அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து தருவதுதான் தியேட்டர் பிராக்டிஷனர் (அனஸ்தெடிக்ஸ்) பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் வேலையாகும்.

நோயாளியின் உடலிலுள்ள பல்வேறு நோய்கள், குறைபாடுகள், நோயாளியின் உடல்நிலை ஆகியவற்றைப் பொருத்து மயக்க மருந்து தருவதை நிர்ணயிக்க வேண்டும். எந்த மயக்க மருந்தை எந்த அளவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதும், எத்தனை நிமிட இடைவெளியில் மயக்க மருந்து தரப்பட வேண்டும்
என்பதும் நோயாளிக்கு நோயாளி மாறுபடும். தியேட்டர் பிராக்டிஷனர் (அனஸ்தெடிக்ஸ்) பிரிவைச் சேர்ந்த செவிலியர்கள் நோயாளியின் உடல்நிலை
பற்றிய முழுமையான தகவல்களை இதற்காகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அறுவைச் சிகிச்சை முடிந்த பின்பு - மயக்க மருந்தின் வீரியம் குறைந்த பின்பு - நோயாளியின் உடல்நிலையைக் கண்காணித்து அதைப் பற்றி மருத்துவர்களிடம் தெரிவிப்பதும் இந்த செவிலியர்களின் பணியாக இருக்கிறது.

தியேட்டர் பிராக்டிஷனர்: இப்பிரிவில் பணி செய்யும் செவிலியர்கள் அனைத்துவிதமான அறுவைச் சிகிச்சைகளின்போதும் மருத்துவருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். எலும்பு முறிவு, மூளை அறுவைச் சிகிச்சை, கண் அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, இதயநோய் அறுவைச் சிகிச்சை என்ற எந்த அறுவைச் சிகிச்சையானாலும் நோயாளியின் உடல் நிலை பற்றிய துல்லியமான தகவல்களை இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். மயக்கநிலை முடிந்து சாதாரண நிலைக்கு நோயாளிகள் வரும் வரை இவர்களின் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

அறுவைச் சிகிச்சைக்கு நோயாளியைத் தயார் செய்வது, அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் நவீன கருவிகள் உட்பட அனைத்துக் கருவிகளையும் தயார்நிலையில் வைத்திருப்பது, அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதற்கேற்றபடி நடந்து அவருக்கு உதவியாக இருப்பது, அறுவைச் சிகிச்சை செய்யும்போது ஏற்படும் நோயாளியின் உடல்நிலை மாறுதல்களை உடனுக்குடன் மருத்துவரிடம் தெரிவிப்பது, அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கருவிகளை உடனுக்குடன் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் எடுத்துக் கொடுப்பது ஆகியவை இத்துறை சார்ந்த செவிலியர்களின் பணியாகும்.

மூளைஅறுவைச் சிகிச்சையின்போது நிறைய ரத்தம் வெளியேறும். ஓரிரு விநாடிகளுக்குள் அவற்றைத் துடைக்கத் தேவையானவற்றை எடுத்துத் தருவது உட்பட பல பணிகளை அறுவைச் சிகிச்சையின் போது இந்த தியேட்டர் பிராக்டிஷனர் செவிலியர்கள் செய்வார்கள்.

தற்போதைய நவீன அறுவைச் சிகிச்சைக் கூடங்களில் அறுவைச் சிகிச்சையின்போது நடக்கிற நிகழ்வுகளை அறுவைச் சிகிச்சைக் கூடத்தின் சுவர்களில் உள்ள பெரிய திரையில் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் உட்பட அங்குள்ள அனைவரும் பார்க்க முடியும். பிரிட்டனில் மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட தியேட்டர் பிராக்டிஷனர் பிரிவில் வேலை செய்யும் செவிலியர்கள் மாதம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள்.

டெபுடி தியேட்டர் மேனேஜர்: இந்தப் பிரிவில் பணி செய்யும் செவிலியர்கள் அறுவைச் சிகிச்சைக்கான அனைத்து செயல் முறைகளுக்கும் திட்டமிடுகிறார்கள். அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவை இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பார்கள். உரிய நேரத்தில் தேவையான அனைத்தும் அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் இருக்கும்படியான மேலாண்மைப் பணியை இந்தப் பிரிவில் உள்ள செவிலியர்கள் செய்வார்கள்.

லேர்னிங் டிùஸபிளிட்டி நர்சிங்: இந்தப் பிரிவில் வேலை செய்யும் செவிலியர்களின் பணி மிக முக்கியமானது. தனிப்பட்ட ஒரு நோயாளிக்குத் தேவையான மருத்துவப் பணிகள் என்பவை அவருடைய உடல் நலம் சார்ந்த பணிகள் மட்டுமல்ல. தனிப்பட்ட ஒரு நோயாளியின் மனம் சார்ந்த பிரச்னைகளுமாகும். எனவே ஒரு நோயாளிக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இந்த லேர்னிங் டிùஸபிளிட்டி பிரிவில் வேலை செய்யும் செவிலியர்களின் பணியாகும்.

குறிப்பாக இவர்கள் வயதான நோயாளிகளைப் பார்ப்பதற்கு நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். வயதானவர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான மருத்துவத்தில் இவர்களின் பங்கு முக்கியமானது. பிரிட்டனில் ஆண்டுக்கு ரூ.23 - ரூ.40 லட்சம் வரை இந்தப் பிரிவில் வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கிறது.

நர்சிங் அண்ட் மிட்வைஃபரி கவுன்சில் (Nursing & Midwidery Council) என்பது பிரிட்டனில் உள்ளது. இதன் இணையதளம் https://www.nmc.org.uk/ஆகும். செவிலியர்கள் இந்த இணையதளத்தின் வாயிலாக எவ்வாறு தங்களைப் பதிவு செய்து கொள்வது என்பது பற்றிவிரிவாக இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட செவிலியர்களின் பணிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளைத் தவிர இன்னும் நிறைய செவிலியர் பணிப் பிரிவுகள் உள்ளன. செவிலியர் பணி என்பது நோயாளிகளுடன் நேரடியாகத் தொடர்பு உள்ள அவர்களைக் குணப்படுத்தும் பணி என்பதாக மட்டுமே நமது நாட்டில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்த எல்லைகளுக்குள் மட்டும் செவிலியர் பணி இருந்திருக்கலாம். ஆனால் பல மாறுதல்களுக்கு உட்பட்ட நமது வாழ்க்கையும், அதனால் ஏற்படும் புதிய புதிய நோய்களும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான புதிய புதிய சிகிச்சை முறைகளும், நவீன கருவிகளும் என மருத்துவ உலகம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. எனவே மருத்துவப் பணி செய்யும் அனைவரும் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதுடன், அவற்றை உடனுக்குடன் நடைமுறைப் பணியாக மாற்ற வேண்டிய தேவையும் உள்ளது.

மேலும் ஒரு சில நோயாளிகள் மட்டுமே உள்ள மருத்துவமனைகள் என்ற நிலை மாறி இன்று ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் தோன்றிவிட்டன. எனவே மருத்துவமனைகளை நிர்வகிப்பது, மருத்துவப் பணிகளை நிர்வகிப்பது உள்ளிட்ட புதிய பணிகள் மருத்துவத்துறையில் தோன்றியுள்ளன. செவியலியர்களின் பணிகளில் பல்வேறு பிரிவுகள் தோன்றி வளர்ந்ததற்கு இதுவே காரணம். அந்தப் பிரிவுகளைத் தெரிந்து கொண்டால் எதிர்காலத்தில் செவிலியர் பணி செய்யும் எண்ணம் கொண்டிருப்பவர்கள், அந்தப் பிரிவுகளில் பணி செய்யத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள இது உதவும் என்பதற்காகவே இவ்வளவு விரிவாக அவற்றைப் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. செவிலியர் பணி தவிர, மருத்துவப் படிப்புகளில் பல்வேறு துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தற்போது துணை மருத்துவப் படிப்புகள் நிறைய உள்ளன. இதில் சேர்வதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வில் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி அல்லது பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அவற்றில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் படி 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட பல பிரிவினருக்கு பிரிவு வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளைப் பற்றி பார்ப்போம்.
(தொடரும்)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com