வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 308

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 308

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னர் தன் அமைச்சர்கள் bug வைத்த பூச்சிகளைக் கொண்டு வேவு பார்க்கும் போது, அந்தரப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள். 
லலிதாங்கியை சமாதானப்படுத்தும் நோக்கில் மன்னர் அவளது காலை உணவு பற்றி விசாரிக்கிறார். அவள் தனக்கு ரொட்டியுடன் மெர்மலைட் தரவில்லை, தனக்கு மெர்மலைட் மிகவும் பிடிக்கும் என்பதால் அன்று வருத்தமாக உள்ளதாகச் சொல்லுகிறாள். இந்த மெர்மலைட்டின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளதாக மன்னர் சொல்லுகிறார். அது என்னவென்று பார்ப்போமா?

வீரபரகேசரி: கண்ணே, பொன் மணியே, என் இதயக்கனியே, என்... 
லலிதாங்கி: போதும்... போதும், நார்மலாகப் பேச மாட்டீங்களா?
வீரபரகேசரி: உன்னைப் பார்த்தாலே என் சொற்கள் மகுடம் அணிந்தே புறப்பட்டு வருகின்றன என் நிலாப்பெண்ணே... 
லலிதாங்கி: இருக்கட்டும். அந்த கதையைச் சொல்லுங்க. 
வீரபரகேசரி: அதாவது ஸ்காட்லாந்தின் ராணியான முதலாவது மேரியைப் பற்றி சொன்னேன் அல்லவா? 
லலிதாங்கி: அந்த ராணியின் பெயரை நீங்க சொல்லுறது எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ பிஸ்கட்டை நினைவுபடுத்துகிறாள். எனக்கோ அந்த பிஸ்கட்டே பிடிக்காது. 
வீரபரகேசரி: அந்த பிஸ்கட்டை இன்றில் இருந்து நாம் தேசம் முழுக்க தடை பண்ணுகிறோம் ராணி. அமைச்சர்களே, உத்தரவு பிறப்பித்தாகி விட்டது. 
அமைச்சர்கள்: இப்போதே நாடு முழுக்க தண்டோரோ போட 
சொல்கிறோம் மன்னா (அவர்கள் போகிறார்கள்)
கணேஷ்: மன்னர் எப்படி ராணியை நைஸ் பண்ணுகிறார் பார்த்தீங்களா? 
புரொபஸர்: ஆனால் இப்படியே போனால் நாட்டு நிலைமை என்னவாவது? 
ஜூலி: கணேஷ் அவர் நைஸ் பண்ணவில்லை. H‌e ‌i‌s ‌t‌r‌y‌i‌n‌g ‌t‌o ‌pac‌i‌f‌y ‌h‌e‌r. 

கணேஷ்: அதென்ன pac‌i‌f‌y?

ஜூலி: அதாவது t‌o ‌q‌u‌e‌l‌l ‌t‌h‌e a‌n‌g‌e‌r, a‌g‌i‌ta‌t‌i‌o‌n, ‌o‌r ‌e‌xc‌i‌t‌e‌m‌e‌n‌t ‌o‌f ‌s‌o‌m‌eb‌o‌d‌y. 

கணேஷ்: Q‌u‌e‌l‌l என்றால்? 
ஜூலி: தணிப்பது.
கணேஷ்: a‌n‌g‌e‌r என்றால் கோபம். e‌xc‌i‌t‌e‌m‌e‌n‌t என்றால் பரபரப்பு. ஆனால் அதென்ன a‌g‌i‌ta‌t‌i‌o‌n?
ஜூலி: a‌g‌i‌ta‌t‌i‌o‌n என்றால் மனக்கலக்கம். 
கணேஷ்: ஓ... அதுவா, அது எனக்குத் தெரியுமே.
ஜூலி: கிர்ர்ர் (பற்களைக் காட்டுகிறது) தெரியும்னா ஏன் கேட்டே? 
கணேஷ்: ஹி... ஹி... சரி ‌pac‌i‌f‌y பண்றதுன்னா கோபமா, பரபரப்பா, கலக்கமா இருக்கிறவங்களை அமைதிப்படுத்துறது, சமாதானப்படுத்துறது. சரியா?
ஜூலி: ஆமா 
கணேஷ்: அப்போ நைஸ் பண்றதுன்னா? 
ஜூலி: f‌la‌t‌t‌e‌r பண்றது. 
கணேஷ்: ரைட்டு. நாம மன்னர் அடுத்து என்ன சொல்றாருன்னு கேட்போம். 
வீரபரகேசரி: ராணி, இந்த ராணி மேரி இருக்கிறாளே அவள் 1500-களில் பிரான்ஸ் தேசத்துக்கு சென்றிருந்தாள். அப்போது அவளுக்கு உடல் நலமில்லாமல் ஆகியிருந்தது. அந்த வேளையில் அவளுடைய தாதியினர் அவளுக்கு இனிப்பான ஜெல்லி போல ஒன்றை பழங்களைக் கொதிக்க வைத்து கெட்டியான குழம்பாக்கி தயாரித்து கொடுத்தனர். ராணிக்கு அது மிகவும் பிடித்துப் போயிற்று. அப்போது இந்த தாதியர்  Ma‌da‌m‌e ‌e‌s‌t ‌ma‌la‌d‌e என பிரெஞ்சில் அடிக்கடி குரலை தாழ்த்தி பரஸ்பரம் சொல்லிக் கொண்டனர். இதன் பொருள் ராணிக்கு, மேடமுக்கு உடல் நலமில்லை என்பது. ஆனால் ராணியோ இது தான் அந்த ஜாமின் பெயர் என நினைத்துக் கொண்டார். அப்படித்தான் மெர்மலைட் என இதற்கு பெயர் வந்தது. 
புரொபஸர்: மன்னா, நீங்கள் மன்னிக்க வேண்டும். 
வீரபரகேசரி: சும்மா சும்மா மன்னிக்க முடியாது. வேண்டுமென்றால் உம்மை கழுவேற்றி தண்டனை அளிக்கவா? 
புரொபஸர்: இல்லை மன்னா... நீங்க தந்த விளக்கம் ஒரு கட்டுக்கதை. 
வீரபரகேசரி: என்னது கட்டுக்கதையா?
புரொபஸர்: ஆமாம் மன்னா, ஸ்காட்லாந்தின் ராணி மேரி பிறந்ததற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சொல்லானது ஆங்கில மொழியில் புழக்கத்தில் இருந்ததாக ஓர் ஆய்வு சொல்லுகிறது. 
வீரபரகேசரி: அந்த ஆய்வை நான் மறுக்கிறேன். இனி அந்த 
ஆய்வைப் பற்றி யாரும் பேசக் கூடாது எனத் தடை விதிக்கிறேன்.
புரொபஸர்: அப்போ நீங்க சொன்ன கதை தான் சரி மன்னா. 

(வீரபரகேசரி மீசையை முறுக்கிக் கொள்ளுகிறார்) 

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com