

நிறுவனத்தில் வேலை
பணி: டெபுடி டைரக்டர்
காலியிடங்கள்: 151
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணக்கியல், சந்தையியல், காப்பீடு, வருமான வரித்துறை போன்ற ஏதாவதொரு பணியில் குறைந்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு யுபிஎஸ்சி நடத்தும் ஆன்லைன் எழுத்துத்தேர்வில பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சிக்குப் பின்னர் மத்திய அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.09.2021
பணி: ஊர்தி ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் 32 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்று
வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தானியங்கி மோட்டார் வாகன பழுது பணிமனையில் ஓர் ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இணையதளம் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
முகவரி: செயற்பொறியாளர், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்டம், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை- 600035.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.09.2021
மொத்த காலியிடங்கள் : 76
பணி: சர்க்கிள் டிஃபென்ஸ் பேங்கிங்
அட்வைசர் - 01
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 19.50 லட்சம்
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர் (மார்க்கெட்டிங் & கம்யூனிகேஷன்) - 04
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர் - என்ஜினியர் (சிவில்) - 17
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர் என்ஜினியர் (எலக்ட்ரிகல்) - 06
சம்பளம்: மாதம் ரூ.36,000 - ரூ.63,840
பணி: டெபுடி மேனேஜர் (அக்ரி ஸ்பெஷல்) - 10
சம்பளம்: மாதம் ரூ.48,170 - ரூ.69,810
பணி: ரிலேஷன்ஷிப் மேனேஜர்
(ஓஎம்பி) - 06
பணி: புராடக்ட் மேனேஜர் (ஓஎம்பி) - 02
சம்பளம்: மாதம் ரூ.63,840 - ரூ.78,230
வயது வரம்பு : உதவி மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : சர்க்கிள் டிஃபென்ஸ் பேங்கிங் அட்வைசர் - மேஜர் ஜெனரல் அல்லது பிரிகேடியர் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இணை மேலாளர் பணிக்கு எம்பிஏ அல்லது ரூரல் மேனேஜ்மென்ட் முதுநிலை பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அசிஸ்டன்ட் மேனேஜர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிரிவில் பி.இ, அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரிலேஷன்ஷிப் மேனேஜர் மற்றும் புராடக்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக் முடித்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://bank.sbi/web/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.09.2021
மொத்த காலியிடங்கள்: 347
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் மேனேஜர் (ரிஸ்க்) - 60
பணி: மேனேஜர் (ரிஸ்க்) - 60
பணி: மேனேஜர் (சிவில் என்ஜினியர்) - 07
பணி: மேனேஜர் (ஆர்க்கிடெக்ட்) - 07
பணி: மேனேஜர் (எலக்ட்ரிகல் என்ஜினியர்) - 02
பணி: மேனேஜர் (பிரிண்டிங் டெக்னாலஜி) - 01
பணி: மேனேஜர் (ஃபாரெக்ஸ்) - 50
பணி: மேனேஜர் (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) - 14
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர் (டெக்னிக்கல் ஆபீசர்) - 26
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர் (ஃபாரெக்ஸ்) - 120
தகுதி: எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎஃப்ஏ, எம்எஃப்சி, எஃப்ஆர்எம், பிஜிடிபிஎம், பிஜிபிஎம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: மேலாளர் பணிக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு 21 வயது முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.unionbankofindia.co.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ 850 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20}%20ENGLISH%202021}22%20FINAL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.09.2021
பணி: ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள் : 445
வயது வரம்பு: 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.500, பெண் விண்ணப்பதார்கள் ரூ.375 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
http://sssc.gov.in/Advertisement-HC/PUNJAB_STENOGRAPHER_ADVERTISEMENT_2021.pdf else https://sssc.gov.in/Advertisement-HC/HARYANA_STENOGRAPHER_ADVERTISEMENT_2021.pdf ஆகிய லிங்க்குகளில் சென்று பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.09.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.