

பணியிடம்: தஞ்சாவூர்
பணி: ஆற்றுப்படுத்துதல் (கவுன்ùஸலர்)
காலியிடங்கள்: 6 (3 ஆண்கள் + 3 பெண்கள்)
தகுதி: உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.thanjavur.nic.in என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து படித்து பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக தங்களது விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிகளுக்கு நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
முகவரி:
1. கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம்(ஆண்கள்), வ.ஊ.சி. நகர், தஞ்சாவூர் - 613 007
2. கண்காணிப்பாளர், அன்னை சத்யா குழந்தைகள் இல்லம்(பெண்கள்), மேம்பாலம், தஞ்சாவூர் - 613 001
மேலும் விவரங்கள் அறிய:
ttps://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2021/01/2021012214.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.02.2021
பணி: மேனேஜர் செக்யூரிட்டி
காலியிடங்கள்: 100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி, 21வயது முதல் 35-வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உள்ள்ஹஹ் /கங்ற்ற்ங்ழ் க்ழ்ஹச்ற்ண்ய்ஞ் முறைகள் நேர்முகத் தேர்வு முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்து வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
முகவரி:
Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporate Office plot no 4, Sector 10, Dwarka , New Delhi -110075
மேலும் விவரங்கள் அறிய: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.02.2021
மொத்த காலியிடங்கள்: 185
பணியிடம்: தஞ்சாவூர்
பணி: உதவியாளர் - 72
சம்பளம்: மாதம் ரூ.2410 + 4049
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: பட்டியல் எழுத்தர் - 62
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர் -51
சம்பளம்: ரூ.2359 + 4049
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் - 613001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.02.2021
மொத்த காலியிடங்கள்: 322
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Officers in Grade B (DR) - General
காலியிடங்கள்: 270
பணி: Officers in Grade B (DR) - DEPR
காலியிடங்கள்: 29
பணி: Officers in Grade B (DR) - DSIM
காலியிடங்கள்: 23
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள்,கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், கணித பொருளாதாரம், ஒருங்கிணைந்த பொருளாதாரம், நிதி போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 1.01.2021 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை குறித்து அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.35,150 - ரூ.50,900
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். வங்கி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in, https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்காலப் பயன்பாட்டிற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/VTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2021
பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
தகுதி: மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டேஷனல் பயாலஜி, லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் எம்.எஸ்ஸி/ எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினித்துறையில் மென்பொருள் திறன் பெற்றிருப்பது விரும்பத் தக்கது.
சம்பளம்: ரூ.31,000 மற்றும் இதர படிகள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.J.Rajendhran, Department of Genetics, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021.
மேலும் விவரங்களுக்கு: https://mkuniversity.ac.in/new/notification_2021/SERB%20JRF%20ADVT.pdf என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.02.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.