ஸ்டார்ட் அப்... சில அடிப்படைத் தேவைகள்!
21-ஆம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றிஎழுதும் வல்லமை படைத்தவர்கள் தொழில்முனைவோர்.


21-ஆம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றிஎழுதும் வல்லமை படைத்தவர்கள் தொழில்முனைவோர். அவர்களால் தொடங்கப்படும் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) பெரும் வெற்றி அடைந்து மக்களுக்கும் பலனளித்து வருகின்றன. அமேஸான், ஃபிளிப்கார்ட், ùஸாமேட்டோ, ஓலா உள்ளிட்ட புத்தாக்க நிறுவனங்கள் மக்களிடையே வெற்றியடைந்துள்ளன.
அந்நிறுவனங்கள் அதிக வருவாயையும் ஈட்டி வருகின்றன. அதனால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் ஸ்டார்ட் அப்களை உருவாக்கி, தொழில்முனைவோராக மாறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் அடிப்படையான விஷயமே புதுமையான யோசனைகள்தாம். மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் ஒரு செயல்பாட்டை எளிமைப்படுத்துவதே ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நோக்கம். அந்த யோசனையை வணிகரீதியில் பயன்படுத்துவதே தொழில்முனைவோரின் முக்கிய இலக்கு.
அவ்வாறு, தொழில்முனைவோராக விரும்புவோரும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்க எண்ணுவோரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைகள் சில உள்ளன.
தன்னம்பிக்கை: முதலில், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது. ஏனெனில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவதில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 12 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
எனவே, எவ்வளள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிதாக முளைத்தாலும் நம்மால் வெற்றியடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொள்வது மிகளம் அவசியம். அந்தத் தன்னம்பிக்கையே நம்மை தினமும் நெஞ்சுரத்தோடு தொடர்ந்து பயணிக்கச் செய்யும். எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் தன்னம்பிக்கை நம்மைக் காப்பாற்றும்.
தோல்வி... வெற்றியின் ஒரு பகுதி: அடுத்தது, தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கற்க வேண்டியது மிகளம் அவசியமானது. பெரும்பாலான நேரங்களில், தொழில்முனைவோரின் வெற்றி மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதை, பல்வேறு தோல்விகளையும் துயரங்களையும் கொண்டதாகவே இருக்கிறது.
இந்த நிலை தொழில்முனைவோருக்கு மட்டுமல்ல; எத்துறையில் வெற்றி காண்பவரது பின்னணியும் தோல்வி நிறைந்ததாகவே உள்ளது. வெற்றியை உணர்ளப்பூர்வமாக ரசிக்க வேண்டுமானால், தோல்வியைச் சந்தித்தே ஆகவேண்டும். தோல்வியை எதிர்கொள்ளாமல் கிடைக்கும் வெற்றி, நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. அத்தகைய சூழலில், வெற்றியின் அருமை என்ன என்பதே தெரியாமல் போய்விடும்.
வெற்றி நமக்கு எதையும் புதிதாகக் கற்றுத் தராது. ஆனால், தோல்வியானது பல்வேறு பாடங்களைக் கற்றுத் தரும் ஆசானாகவே விளங்குகிறது. தோல்வி மூலம் நம்மை நாமே மறு சீரமைப்புச் செய்து கொள்ள முடியும். எனவே, தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி என எண்ணத் தொடங்கிவிட்டால், தொழில்முனைவோர் ஆவதற்கான நமது பயணத்தில் எந்தவிதத் தடையும் ஏற்படாது.
பிடிவாதமும் தேவை: ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவ விரும்பும் தொழில்முனைவோருக்கு அவசியமான மற்றொன்று பிடிவாதம். "பிடிவாதம் கூடாது' என பெரியோர் பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், தொழில்முனைவோருக்கு மிகளம் அடிப்படையான குணம் பிடிவாதம்.
எவ்வளள துன்பமயச் சூழலைச் சந்தித்தாலும், ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றியடைந்தே தீருவேன் என்ற பிடிவாதத்தைக் கைக்கொள்ள வேண்டும். அந்தப் பிடிவாதமே வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். தொழில்முனைவோராக முயல்வோர், பல துன்பங்களையும் பின்னடைளகளையும் சந்திக்கும் சூழல் நிச்சயம் உருவாகும். அவ்வாறான சூழல்களைத் திறம்படக் கையாண்டு தாக்குப் பிடிக்க வேண்டும்.
பொறுமையே துணை: தொழில்முனைவோருக்கு பொறுமை மிகளம் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவதற்கும், உடன் பணியாற்றுவோரை அனுசரித்துச் செல்வதற்கும் பொறுமை அவசியமாகிறது. நிறுவனத்தைத் தொடங்கிய உடனே வருவாயை எதிர்பார்க்க முடியாது. நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். எனவே, ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். அத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கான பொறுமையை தொழில்முனைவோர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி காண்பதற்கு சில ஆண்டுகள் ஆகும். அதுவரை உறவினர்களையும் நம்மைச் சார்ந்து இருப்போரையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். நம் முயற்சியை பலர் பழித்துப் பேசுவர். நம்பிக்கையற்ற வார்த்தைகளை அம்புகளாக நம் மீது தொடுப்பர். ஆனால், நம்முடைய வலிமை நமக்கு மட்டுமே தெரியும்.
நம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காமல் நாள்தோறும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோமானால், இலக்கை கூடிய விரைவில் சென்றடைந்து விட முடியும். பொருளாதாரம், சமூகம் சார்ந்து ஆயிரம் தடைகள் வந்தாலும், அவற்றை எதிர்த்து நின்று வெற்றி காண்பேன் என்ற தன்னம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து இயக்கிச் செல்லும். அதன் உதவியைக் கொண்டு தொழில்முனைவோராக வெற்றி காண்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...