வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 303

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 303
Published on
Updated on
2 min read

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தமாக கணேஷ் ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு ஜூலி இது ஒரு typical two cents என்கிறது. ஜூலி என்ன சொல்ல வருகிறது. அறிவோமா?
கணேஷ்: அதென்ன சார் two cents?
புரொபஸர்: ஒரு சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. நான்கு பேர் ஆவேசமாக தம் தரப்பே நியாயமானது என வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஐந்தாவது ஒருவர் அமைதியாக என்னுடைய தாழ்வான கருத்தை நான் இங்கே சொல்லலாமா? என ஆரம்பிக்கிறார். அதைத் தான் ஆங்கிலத்தில் may I offer my two cents எனச் சொல்வார்கள்.  
கணேஷ்: ஆமா சார், நானும் கவனிச்சிருக்கேன். அதென்ன அவரே தன் கருத்தைத் தாழ்வானது, மட்டமானது எனச் சொல்வது? அவரே அப்படிச் சொன்னால் மற்றவர்கள் மதிப்பார்களா?
ஜூலி: அடக் கருமமே...
கணேஷ்: ஏன்... என்ன?
ஜுலி: My humble opinion  என்று சொல்வார்களே அது தான் "என் தாழ்வான கருத்து'. அதாவது என் பணிவான கருத்து. 
கணேஷ்: ஓக்கே... ஓக்கே... நான் குழம்பிப் போயிட்டேன். சாரி. 
ஜூலி: You are sometimes honest to a fault.

கணேஷ்: என்னது நாணயமாக இருப்பதே தவறாகி விடும் எனச் சொல்கிறாயா? 
ஜூலி: இல்லை, ரொம்ப அதிகமாக நேர்மையுடன் இருத்தலாகாது என்கிறேன். Honest to a fault என்றால் More honest than is necessary. 
கணேஷ்: புரியல. 
ஜூலி: சொல்றேன் கேளு. ஒரு ஊரில் ஒரு சத்தியவான் இருந்தான். 
வீரபரகேசரி (அதிர்ச்சியில்): என்னது என் நாட்டில் ஒரு சத்தியவானா?    
ஜூலி: பதறாதீர்கள் மன்னா, இது ஒரு பழங்காலத்து ஊரில்.  
வீரபரகேசரி: சரி... சரி, எனக்கு சத்தியசீலர்கள் என்றாலே பயம். சமயம் பார்க்காமல் கடித்து வைத்து விடுவார்கள். 
அரசியலில் அவர்கள் ஒருவித வைரஸ்கள். சரி போகட்டும், கதையைச் சொல்லு.
ஜூலி: இந்த சத்தியசீலன் நம் மன்னர் சொல்வது போலத்தான். ஒருநாள் சில கொள்ளையர்கள்  ஒரு முனிவரை அவரிடம் இருந்த ஓர் அபூர்வமான பொருளைப் பறிப்பதற்காக துரத்தி வந்தார்கள். முனிவரோ இந்த சத்தியசீலன் வீட்டுக் கதவைத் தட்டி அபயம் கேட்டார். அவனும் உடனே அபயம் கொடுத்து அவரை பதுக்கிக் கொண்டான். சற்று நேரத்தில் கொள்ளையர்களும் வந்து கதவைத் தட்டி,  முனிவர் அங்கு வந்தாரா எனக் கேட்டனர். 
சத்தியசீலனோ சற்றும் யோசிக்காமல் "ஆமாம்' என்று முனிவர் பதுங்கி இருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டான். கொள்ளையர்கள் முனிவரை அடித்து சாகும் நிலையில் விட்டுவிட்டு அவருடைய அபூர்வப் பொருளையும் பறித்துக் கொண்டு போகும் வழியில், சத்தியசீலனின் மண்டையில் ஒரு போடு போட்டு விட்டுப் போயினர். சாகும் தறுவாயில் முனிவர் சத்தியசீலனுக்கு, ""நீ அடுத்த பிறவியில் புழுவாகத் தோன்றி நரகவேதனை பெறுவாய்'' என சாபமிட்டு விட்டார். 
கணேஷ்: ஐயோ!
ஜூலி: இந்த சத்தியசீலன் வெறுமனே honest அல்ல. அவன் honest to a fault.. அதனால்தான் சாபம் பெற்றான்.  
கணேஷ்: அவன் வெறுமனே honest என்றால் என்ன செய்திருப்பான்? 
ஜூலி: தான் சொல்லும் உண்மையின் அறத்தைப் பற்றி சிந்தித்து பொய் சொல்லி இருப்பான். அல்லது அவனுக்கு வலுவுள்ள பட்சத்தில், "என்னால் சொல்ல முடியாது' என்று முனிவரைக் காப்பதற்காக போராடி இருக்கலாம்.   
கணேஷ்: சூப்பர். இந்த ற்ர் ஹ ச்ஹன்ப்ற் என்றால் இப்படி ஒரு பொருள் உள்ளதா? 
ஜூலி: ஆமா. இரு விளக்குகிறேன். சொறிந்து விட்டு வருகிறேன். (அது தன் பின்னங்காலால் வயிற்றுப் பக்கம் சுகமாக சொறிகிறது.)

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com