வேலை... வேலை... வேலை...

பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வேலை... வேலை... வேலை...

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

பணி: சீஃப் செக்யூரிட்டி ஆபீசர் - 02
பணி: செக்யூரிட்டி ஆபீசர் - 15

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Shri Pravin Kumar Das, Deputy Director, Dte of Personnel(Pre}AAI), Room No.266,2nd Floor, DRDO Bhawan, New Delhi } 110105.

மேலும் விவரங்கள் அறிய: https://www.drdo.gov.in/sites/default/files/career}vacancy}documents/CSO_SOonDepution.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.06.21

கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் சிவிலியன் ஸ்டாப் ஆபீசர் (லாஜிஸ்டிக்ஸ்)

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200

பணி: சிவிலியன் ஸ்டாப் ஆபீஸர் (லாஜிஸ்டிக்ஸ்)
லியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,08,700
பணி: சிவிலியன் கெசட்டடு ஆபிசர் (லாஜிஸ்டிக்ஸ்)

காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பிரிவில் மேலாண்மையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஸ்டோர் அட்மினிஸ்ட்ரேஷன் அண்ட் அக்கவுண்டிங் பிரிவில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்கள் பல்கலைக்கழகம், பொதுத்துறையில் அலுவலராக இருத்தல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் வழக்கமான அடிப்படையில் இதே போன்று பதவி வகித்தல் வேண்டும்.

பணி: செக்ஷன் ஆபீசர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.34,800

பணி: அப்பர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 46
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.20,200

தகுதி: மத்திய அரசில் அலுவலராக இருத்தல் என்ற அடிப்படையில் இதேபோன்ற பதவி வகித்தல் வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Directorate of Personnel (SCSO (CP), Coast Guard Head Quarters, National Stadium Complex, New Delhi } 110 001

மேலும் விவரங்களுக்கு: https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202104270438314339223Advertisement.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.06.2021

இந்திய ராணுவத்தில் வேலை

பணி: சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், சோல்ஜர் டெக்னிக்கல் என்ஏ, செபாய் பார்மா, சோல்ஜர் ஸ்டோர்கீப்பர்

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பி.பார்ம், டி.பார்ம் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 17 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு , உடல் அளவு, கல்வித் தகுதி ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/ARO_KOTA__ARMY_RECRUITMENT_RALLY__FOR_SOL_GD__SOL_TECH___SOL_TDN__10thand_8th.pdf .ல்க்ச் லிங்கில் சென்று ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பியுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.06.2021

வங்கி அதிகாரி வேலை


நிறுவனம்: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன்

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

பணிகள்: குரூப் ஏ ஆபீசர்ஸ், குரூப் பி ஆபீஸ் அசிஸ்டன்ட் போஸ்ட்ஸ்
மொத்த காலியிடங்கள்: 10,729

தகுதி: அனைத்து துறையைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்சிஏ, எம்பிஏ முதுநிலை பட்டதாரிகள், சிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 01.06.2021 தேதியின்படி ஆபிசர் ஸ்கேல் - ஐஐஐ (சீனியர் மேனேஜர்) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 40 வயதிற்குள்ளும், ஆபிசர் ஸ்கேல் - ஐஐ ( மேனேஜர்) - பணிக்கு 21வயது முதல் 32 வயதிற்குள்ளும், ஆபிசர் ஸ்கேல் - ஐ ( அசிஸ்டண்ட் மேனேஜர்) - பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும், ஆபீஸ் அசிஸ்டன்ட் ( மல்ட்டிபர்ப்பஸ்) -18 வயது முதல் 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஒரு சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஒற்றை நிலை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.175, மற்ற

அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்த அட்டைகள் மற்றும் நெட்பேங்கிங் மூலமும் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp}content/uploads/Advt}_CRP}RRB}X_final_1811.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.06.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com