வேலை... வேலை... வேலை...

மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டயப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வேலை... வேலை... வேலை...

வ.உ. சிதம்பரனார்துறைமுக கழகத்தில் வேலை

பணி : சீஃப் மெடிகல் ஆபிசர்

காலியிடம்: 01

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டயப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பணி முன் அனுபவத்துக்கேற்ப முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.1,00,000- ரூ.2,60,000

விண்ணப்பிக்கும் முறை : www.vocport.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu

மேலும் விபரங்கள் அறிய: https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20the%20post%20of%20CMO.PDF என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 03.03.2021

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 197

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: அசிஸ்டன்ட் டைரக்டர் ஆஃப் ஹார்ட்டி கல்ச்சர்

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500

பணி: ஹார்டிகல்சுரல் ஆபிஸர்

காலியிடங்கள்: 169

சம்பளம்: மாதம் ரூ.37,700 - ரூ.1,19,500

தகுதி: தோட்டக்கலை பிரிவில் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் அசிஸ்டன்ட் டைரக்டர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஹார்டிகல்சுரல் ஆபிஸர் பணிக்கு பி.எஸ்ஸி ஹார்டிகல்சர் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் மற்றும் விதவைகள் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில்லை.

பதிவுக் கட்டணம்: ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரி பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/03_2021_ADH%20&%20HO_Eng.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in  அல்லது www.tnpscexams.in  என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.03.2021

தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 28

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

குரூப் "பி' பணியிடங்கள் விவரம்:
பணி: ஸ்டெனோ கிரேடு ஐஐ - 02
பணி: லைப்ரரியன் - 01
பணி: ஸ்டாப் நர்ஸ் - 01
பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட் (லேப்) - 01
பணி: சீனியர் டெக்னிகல் அசிஸ்டன்ட்( டாக்குமென்டெஷன்) - 01
பணி: அசிஸ்டன்ட் ரிசர்ச் ஆபிஸர் (ஹியுமானிட்டி குரூப்) - 01
பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட் (பிரஸ்) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ. 34,800 + தர ஊதியம் ரூ.4,200

குரூப் சி, எம்டிஎஸ் அண்ட் குரூப் டி பணியிடங்கள் விவரம்:

பணி: பார்மஸிஸ்ட் - 01
பணி: ரிசப்சனிஸ்ட் - 01
பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு ஐஐஐ - 09
பணி: அசிஸ்டன்ட் ஸ்டோர் கீப்பர் - 01
பணி: காப்பி ஹோல்டர் - 01
பணி: ஃபீடர் - 01
பணி: லேபாரட்டரி அட்டென்டன்ட் - 01
பணி: அனிமல் அட்டென்டன்ட் - 01
பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 04

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து, நர்சிங், டிஎம்எல்டி முடித்தவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் பட்டம், அறிவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் துறைசார்ந்த ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nihfw.org  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Director (ADMN), NIHFW , Baba Gang Nath Marg,Munirka, New Delhi }110 067.

மேலும் விவரங்கள் அறிய: http://www.nihfw.org ApXÕ http://www.nihfw.org/Doc/Revised%20advt.%20for%20Group%20B%20Posts%2029012021.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.03.2021

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 15

பணியிடம்: தஞ்சாவூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அட்ஜங்ட் ஃபேகல்ட்டி - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 + எச்ஆர்ஏ(8%)
வயதுவரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ரிசர்ச் அசோசியேட் - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000 + எச்ஆர்ஏ(8%)
பணி: சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ (இன்ஸ்டிடியூட் புராஜெக்ட்ஸ்) - 05
பணி: சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ (ஜேஆர்எஃப்) - 01
சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ(8%)
பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ(8%)
பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 + எச்ஆர்ஏ(8%)
பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட் - 01
பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட் - 01
பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட் - 01
பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 + எச்ஆர்ஏ(8%)
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: ஃபுட் அனலிஸ்ட் - 01

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: அட்ஜங்ட் ஃபேகல்ட்டி பணிக்கு அதிகபட்சமாக 65வயதிற்குள் இருக்க வேண்டும். ஃபுட் அனலிஸ்ட் பதவிக்கு அதிகபட்சமாக 52 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு 35 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப் பட்ட துறையில் பட்டம், பொறியியல் துறையில் பிஇ, பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்சி., முனைவர் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iifpt.edu.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: http://iifpt.edu.in/img/rec2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.03.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com