வேலை... வேலை... வேலை...

18 வயது  முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
வேலை... வேலை... வேலை...
Updated on
2 min read


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில்  வேலை

பணி:  ஜூனியர் அசிஸ்டன்ட்/  அக்கவுண்ட்ஸ்

காலியிடங்கள்: 500

சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000

தகுதி:  பி.காம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:   18 வயது  முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.tangedco.gov.in/linkpdf/JA_Notification_and_Annexures_2019-2020.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப்  படித்துப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 9.03.2021

இந்திய ராணுவத்தில் வேலை 

பணி: நர்சிங் (பி.எஸ்ஸி) (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)

காலியிடங்கள்: 220 

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று  இருக்க வேண்டும்.

வயது வரம்பு:  16 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி நர்சிங் படிப்பு முடித்தவுடன்,  மிலிட்டரி நர்சிங் சர்வீஸ் பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

http://164.100.158.23/writereaddata/Portal/Images/pdf/Advertisement_BSc_(N)_Course_2021.pdf என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.03.2021


வானிலை ஆய்வுத்துறையில் வேலை

பணி: சயின்டிஸ்ட்  இ (ஃபோர்காஸ்டிங்)  

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - ரூ. 2,15,900

பணி:சயின்டிஸ்ட் இ (இன்ஸ்ட்ரூமென்டேஷன்)  
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - ரூ.2,15,900

பணி: சயின்டிஸ்ட்  இ (கம்ப்யூட்டர்/ ஐடி) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - ரூ.2,15,900

பணி: சயின்டிஸ்ட்  டி  (ஃபோர்காஸ்டிங்)   
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200

பணி: சயின்டிஸ்ட்  டி (இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200

பணி: சயின்டிஸ்ட்  டி (அக்ரிகல்சர் மெட்ரோலஜி) 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200

பணி: சயின்டிஸ்ட்  டி (கம்ப்யூட்டர்/ ஐடி) 
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200
வயது  வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: சயின்டிஸ்ட் சி (ஃபோர்காஸ்டிங்)   
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,08,700

பணி: சயின்டிஸ்ட் சி (இன்ஸ்ட்ருமென்டேஷன்)  
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2.08.700

வயது வரம்பு:  சயின்டிஸ்ட் சி (இன்ஸ்ட்ருமென்டேஷன்)  பணிக்கு  40 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிகளுக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

விண்ணப்பிக்கும் முறை: www.imd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு: https://internal.imd.gov.in/recruits/20210121_rec_52_1.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.03.2021



பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சூப்பர்வைசர் (ட்ராஃப்ட்ஸ்மேன்)   - 01

பணி: சூப்பர்வைசர் (டெக்னிகல் சேஃப்டி)   - 01

பணி:  சூப்பர்வைசர் (என்விரான்மென்ட்)   - 01

பணி:  ஜூனியர் ஹிந்தி ட்ரான்ஸ்லேட்டர்  - 01

சம்பளம்: மாதம் ரூ.26,000 - ரூ.1,00,000

பணி: ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டன்ட்   - 08
பணி:  ஜூனியர் டைம் கீப்பர்   - 04

சம்பளம்: மாதம் ரூ.8,350 - ரூ.20,470

பணி:  ஜூனியர் டெக்னிசியன்   - 07

சம்பளம்: மாதம் ரூ.7750 - ரூ.10,040

தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முறையே நிமிடத்திற்கு 40, 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினி அறிவியல், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன்  எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshngabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://spmhoshangabad.spmcil.com/UploadDocument/SPM%20FINAL%20ADVERTISEMENT%20FOR%20WEBSITE.599e7fb8-a8a0-4a73-9984-aa9fed259a6b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.03.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com