வேலை... வேலை... வேலை...

டிப்ளமா (கோச்சிங்) அல்லது ஒலிம்பிக் அல்லது சர்வதேச பங்கேற்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வேலை... வேலை... வேலை...

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 320

பணி: அசிஸ்டண்ட் கோச் - 220

வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.41,420 -ரூ.1,12,400

பணி: கோச் - 100

வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,05,000 - ரூ.1,50,000

தகுதி: டிப்ளமா (கோச்சிங்) அல்லது ஒலிம்பிக் அல்லது சர்வதேச பங்கேற்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற விரிவான விவரங்கள் அறிய: https://sportsauthorityofindia.nic.in/index1.asp?ls_id=17 என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2021


நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 26

பதவி: டெக்னிகல் அசிஸ்டன்ட் -19

வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.49,000

தகுதி: மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டயப் டிப்பில் முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும். பிசிஏ, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல் என்ஜினியரிங், மெட்டாலர்ஜி, மெட்டாலர்ஜிகள் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸில் இளங்கலைப் பட்டம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பிரிவில் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: டெக்னிகல் ஆபீசர் -1
சம்பளம்: ரூ.67,000

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிகல் என்ஜினியரிங் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: சீனியர் டெக்னிகல் ஆபீசர்1 - 2
சம்பளம்: ரூ.87,000

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிகல் என்ஜினியரிங்/ ஏரோ ஸ்பேஸ், ஏரோநாட்டிகல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் தேவை.

பதவி: சீனியர் டெக்னிகல் ஆபீசர்2 - 4
சம்பளம்: ரூ.1, 03,000

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிகல் என்ஜினியரிங்/ புரொடக்ஷன், இண்டஸ்ட்ரியல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிகல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், மெட்டீரியல் என்ஜினியரிங் பிரிவில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை: www.nal.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.nal.res.in/medias/content_image/other/1819/all-india-advt-group-iii-3-2021-final-15apr2021.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.05.2021

பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் வேலை

நிறுவனம்: டிஃபன்ஸ் சர்வீஸஸ் ஸ்டாப் காலேஜ்

மொத்த காலியிடங்கள்: 83

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு ஐஐ - 04
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100


பணி: லோயர் டிவிஷன் கிளார்க் (எல்டிசி) - 10
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஆர்டினரி கிரேடு) - 07
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: சுகானி - 01
பணி: கார்பெண்டர் - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (ஆபீஸ் அண்ட் ட்ரெய்னிங்) - 60
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900
வயது வரம்பு: 18 வயது முதல் 25வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10,12, ஐடிஐ மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு, சுருக்கெழுத்தில் திறன் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணிவாரியான தகுதி விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன், உடற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) } 643 231.

மேலும் விவரங்கள் அறிய: http://dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.05.2021

அஞ்சல் துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 36

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: எம்.வி.மெக்கானிக் (ஸ்கில்டு) - 05
பணி: காப்பர் & டின்ஸ்மித் - 01
பணி: பெயின்ட் ஸ்கில்டு - 01
பணி: டயர்மேன் ஸ்கில்டு - 01
பணி: எம்.வி.எலக்ட்ரீசியன் ஸ்கில்டு - 02
பணி: ஓட்டுநர் - 25

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: தகுதிகள், விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் www.indianpost.gov.in என்ற இந்திய அஞ்சல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37 (பழைய எண்16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006.

மேலும் விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/1DWy85t-XkgAiI3LJkQsm9_xt6zAiyz47/view என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.05.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com