வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில்பழகுநர் விதிமுறைகளின்படி, தொழில்பழகுநர் பள்ளியில் தொழில்பழகுநர் பயிற்சி  முடித்திருக்க வேண்டும்.
வேலை... வேலை... வேலை...


திருவிதாங்கூர்  உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் வேலை

பணி: என்ஜினியர் கிராஜுவேட்  அப்பரண்டீஸ் (சிவில்)

தகுதி:  பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில்பழகுநர் விதிமுறைகளின்படி, தொழில்பழகுநர் பள்ளியில் தொழில்பழகுநர் பயிற்சி  முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் அதிகபட்சம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு  கீழ்க்காணும் முகவரிக்கு  அனுப்ப வேண்டும். 

முகவரி: Dy General Manager (HR) Est, FEDO Building, The Fertilisers And Chemicals Travancore Limited, Udyogamandal. PIN-683 501

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://fact.co.in/images/upload/NOTIFICATION-CIVIL-APPRENTICESHIP_17052021_8710.pdf    என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.05.2021


நபார்டு  நிறுவனத்தில்  வேலை 

பணி: ஜூனியர் கன்சல்டன்ட்  - 20

தகுதி: எம்பிஏ படித்திருக்க வேண்டும். அல்லது ஏதேனும்  தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர்  பிரிவில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.    3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000

வயது வரம்பு: 2021 மே 1 - ஆம் தேதியின் படி குறைந்தபட்சம் 25 வயது முதல்  35- வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணி: சீனியர் கன்சல்டன்ட் - 02

தகுதி: முதுகலை  பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரூரல் டெவலப்மென்ட்,  ரூரல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

வயது வரம்பு: 2021 மே 1 ஆம் தேதியின் படி குறைந்தபட்சம் 40 வயது முதல்  50- வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:  ரூ.1,50,000  

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.nabcons.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.nabcons.com/downloads/Advertisement%20_OFDD.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.05.2021 
 

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை

பணி:  வைஸ் பிரசிடென்ட் (ஸ்ட்ரேட்டஜி,  பைனான்ஸ்& அக்கவுண்ட்ஸ்)   - 01 
தகுதி மற்றும் அனுபவம்:  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சிஏ, சிஎம்ஏ, சிஎஃப்ஏ, பிஜிடிஎம், எம்பிஏ  முடித்து குறைந்தபட்சம் 5 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: வைஸ் பிரசிடென்ட் (லாஜிஸ்டிக்ஸ் இன்ஃபரா ஸ்ட்ரக்சர்)  - 01 
பணி: வைஸ் பிரசிடென்ட் (பாசஞ்சர்ஸ் கன்வீனியன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) - 01 

தகுதி மற்றும் அனுபவம்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து  பொறியியல் துறையில் பட்டம், வணிகவியல், பொருளாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் பட்டம் மற்றும் குறைந்தபட்சம் 5 முதல் 15 ஆண்டுகள்  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: எக்ஸிகியூட்டிவ்  அசிஸ்டன்ட் டூ  
சேர்மன் - 02 

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து திட்டமிடல், மேலாண்மைத்துறையில் முதுகலை பட்டம் அல்லது எம்பிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 40-வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.  

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை  ravinder.nhlml@nhai.org  என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் அஞ்சல் முகவரிக்கு வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Sh. Ravinder,
Director/COO,
National Highways Logistics Management Limited - (NHLML)
G}5 & 6 Sector 10 Dwarka, New Delhi-110075 

மேலும் விவரங்கள் அறிய: https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Consolidated%20job%20advertisement_NHLML-Revised%20%2811.05.21%29_0.pdf  

என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 01.06.2021   

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

பணி: சீஃப் டைரக்டர், குரூப் "ஏ'  

காலியிடங்கள்: 08

தகுதி: மத்திய,  மாநில,  கூட்டுறவு,  பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். வழக்கமான அடிப்படையில் இதே போன்ற  பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும். 

வயது வரம்பு :  56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் டெபியூட்டேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Executive Director (P&A). National Cooperative Development Corporation,4. Siri lnstitutional Area. HauzKhas. New Delhi-110016 

மேலும் விவரங்கள் அறிய: https://ncdc.in/documents/career/5615090421CD-on-Deputation_09042021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.06.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com