வேலை... வேலை... வேலை...

8 ஆவது தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை... வேலை... வேலை...
Published on
Updated on
2 min read

இந்திய ராணுவத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்:     191 
பணி: ஆபீசர் (எஸ்எஸ்சி என்ட்ரி) 

1.எஸ்எஸ்சி டெக்னிகல் - ஆண் -175
2.எஸ்எஸ்சி டெக்னிகல் - பெண் -14 

வயது வரம்பு: 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 20 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

3.  மறைந்த பாதுகாப்பு பணியாளரின் மனைவி  - 02

வயது வரம்பு: 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500

வயது வரம்பு: 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH__58.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.10.2021 


சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலை 

பணி : ஓட்டுநர்

காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000 

தகுதி: 8 ஆவது தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.  

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : https://cmdadirectrecruitment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்ப  கட்டணம் : பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300, எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப் பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

மேலும் விபரங்கள் அறிய:  https://tngjpg.blogspot.com/2021/10/cmda-driver-recruitment-2021.html எனும் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.10.2021 

பிரசார் பாரதி செயலகத்தில்  வேலை 

பணி: கோஸ்ட் ட்ரெய்னி  

காலியிடங்கள்: 16

உதவித் தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். 

தகுதி: ஐசிஏஐ நிறுவனத்தால் நடத்தப்படும் சிஎம்ஏ தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  htpps://Applications.prasarbharati.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய:  https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/10/NIA-of-Cost-Trainee.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.10.2021

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை 

பணி: ஆடிட்டர்/ அக்கவுண்டன்ட்

காலியிடங்கள்: 125

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: கிளார்க் / டிஇஓ - கிரேடு ஏ

காலியிடங்கள்: 74

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 18  வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு சாதனைகள் அடிப்படையிலும், கிளார்க் பணிக்கு தட்டச்சு தேர்வு, ஆடிட்டர் பணிக்கு உறுதிப்படுத்தும் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை: www.cag.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் ஒரு வெள்ளைத்தாளில் தற்போதைய புகைப்படம் ஒட்டி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: www.cag.gov.in அல்லது https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06160346c0d13e6-05537746.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.10.2021

தமிழக அரசில்   வேலை

நிறுவனம்: பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 11  

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000

வயது வரம்பு: 01.03.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளநிலை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை, எண்.259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை - 600 006. 

மேலும் விவரங்கள் அறிய: https://des.tn.gov.in அல்லது https://des.tn.gov.in/node/407 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30.10.2021. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com