வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை... வேலை... வேலை...


தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப கழகத்தில் வேலை

பணி: சயின்டிஸ்ட் சி மற்றும் சயின்டிஸ்ட் டி

மொத்த காலியிடங்கள் : 33

தகுதி : பொறியியல் அல்லது தொழில்நுட்பத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,09,200 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment-delhi.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.400 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரினீங் தேர்வு, தனிப்பட்ட தொடர்புத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்கள் அறிய: https://recruitment-delhi.nielit.gov.in/PDF/MeitY/Detailed_Advt_Scientit_C_and_D.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.12.2021


பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை


பணி: மெம்பர் (ரிசர்ச் ஸ்டாப்) இ - III

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.1, 60,000 வரை வழங்கப்படும்

வயது வரம்பு: 30.09.2021 தேதியின்படி, 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.12.2021

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

பணி: மேனேஜ்மென்ட் ட்ரெய்னி

காலியிடங்கள்: 30

சம்பளம்: முதலாமாண்டு மாதம் ரூ.40,000. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.42,500.
தகுதி: பயிற்சி பிரிவுக்கேற்ப துறைசார்ந்த இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஹிந்தி ஆசிரியர்

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.65,000

தகுதி: ஹிந்தி/ ஹிந்தி மொழிபெயர்ப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்; ஹிந்தியை ஒரு பாடமாகப் பயின்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சம் 30 வயதும் உடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர்,

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200, பிற பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.aicofindia.com/AICEng/General_Documents/Advertisements/Advertisement_Eng.pdf என்ற லிங்கில் சென்று பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.12.2021

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை

பணி: ஃபோர்மேன் (மைனிங்)

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.46,020

வயது வரம்பு: 15.12.2021 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சுரங்கம் மற்றும் சுரங்க ஆய்வு பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.uraniumcorp.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Gen.Manager(Inst./Pers.& IRs./CP), Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise), P.O. Jaduguda Mines, Distt. Singhbhum East, Jharkhand - 831 102

மேலும் விவரங்கள் அறிய: http://uraniumcorp.in/pdf/job/Advt.No.04%20%20of%202021.pdf அல்லது www.uraniumcorp.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.12.2021

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை

பணி : ஃபீல்டு ஆபீசர்/ மவுண்டனயரிங்

காலியிடம்: 01

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று அடிப்படை மற்றும் அட்வான்ஸ் மலையேறுதல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி : கன்சல்டன்ட்

காலியிடம்: 01

தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று எம்.பில்., பி.எச்டி அல்லது ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100 வழங்கப்படும்.

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பிப்போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாள்களுக்குள்ளும், ஃபீல்டு ஆபீசர்/ மவுண்டனயரிங் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் டெப்யூடேஷன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.mha.gov.in/sites/default/files/FillingpostFieldOfficerMountaineering_17112021.pdf மற்றும் https://www.mha.gov.in/sites/default/files/|FillingNationalInstituteDisasterManagement_17112021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.12.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com