நிலவில் மர்ம வீடு!

ஒரு விசித்திரமான தோற்றமுள்ள, கன சதுரம் வடிவிலான பொருளை நிலவில் சீனாவின் "யூட்டு-2' ரோவர் கண்டறிந்துள்ளது.
நிலவில் மர்ம வீடு!


ஒரு விசித்திரமான தோற்றமுள்ள, கன சதுரம் வடிவிலான பொருளை நிலவில் சீனாவின் "யூட்டு-2' ரோவர் கண்டறிந்துள்ளது.

சீனாவின் சாங்கே 4 விண்கலம் 2018, டிசம்பர் 8-ஆம் தேதி செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவின் தென்துருவத்தில் "வோன் கர்மன்' பள்ளத்தாக்கில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி தரையிறங்கியது. அதன் உலவு வாகனமான யூட்டு 6 சக்கரங்களைக் கொண்டுள்ளது. 20 டிகிரி செங்குத்தான மலையில் ஏறும் திறன் கொண்டது. மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. 

ஆய்வுப் பணியைத் தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் கழித்து இந்த மர்மப் பொருளை யூட்டு ரோவர் கண்டறிந்துள்ளது. யூட்டு என்றால் சீன நாட்டுப்புற மொழிப்படி "நிலவுக் கடவுளின் செல்ல முயல்' என அர்த்தம். சாங்கே என்றால் சீன மொழியில் நிலவுக் கடவுள் எனப் பொருள்.

அந்த விண்கலம் அனுப்பிய புகைப்படங்களை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. அந்தப் புகைப்படங்களில்தான் இந்தப் பொருள் காணப்பட்டது. யூட்டூ  ரோவர் தற்போது உள்ள இடத்திலிருந்து 80 மீட்டர் தொலைவில் இந்த மர்மப் பொருள் காணப்படுவதாக "ஸ்பேஸ்.காம்' தெரிவித்துள்ளது.

"அது வேற்றுக்கிரக வாசிகளால் கட்டப்பட்ட வீடா அல்லது சந்திரனை ஆராயும் முன்னோடி விண்கலமா' எனவும் அந்த இணையதளம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தப் பொருளை "மர்ம வீடு' என சீன விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

"அது நிச்சயமாக ஒரு தூணோ அல்லது வேற்றுக்கிரகவாசியோ அல்ல. ஆனால், நிச்சயமாக என்னவென்று பார்க்கப்பட வேண்டியது' என அறிவியல் பத்திரிகை யாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட அந்த மர்மப் பொருள் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதன் தோற்றம் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள ரோவரை அதன் அருகே செல்லுமாறு சீன விஞ்ஞானிகள் இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிச் செல்லும்போது மர்மம் விலகும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com