வைஃபை குறியீடு உஷார்!

நாம் கடைகளில் பொருள் வாங்கும் போது ஏ.டி.எம் கார்டு பின் நம்பர் இல்லாமல் வைஃபை வசதி மூலம் பணம் எடுக்கும் வசதி தற்போது இந்தியா முழுவதும் உள்ளது. இது ஆபத்தானதா? அவசியமானதா?
வைஃபை குறியீடு உஷார்!
Published on
Updated on
1 min read

நாம் கடைகளில் பொருள் வாங்கும் போது ஏ.டி.எம் கார்டு பின் நம்பர் இல்லாமல் வைஃபை வசதி மூலம் பணம் எடுக்கும் வசதி தற்போது இந்தியா முழுவதும் உள்ளது. இது ஆபத்தானதா? அவசியமானதா?

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளான  போடிஎம், கூகுள்பே, போன் பே, யுபிஐ போன்றவற்றை மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பின் நம்பர், பாஸ்வேர்டு போன்றவை தேவை. ஆனால் இந்த வசதியை மேம்படுத்தும் வகையில் தற்போது வைஃபை வசதியின் மூலம் நாம் பாஸ்வேர்டு, பின் நம்பர் உதவி இல்லாமல் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும்.

ஆம்.  படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  வைஃபை அடையாள குறியீடு உள்ள ஏ.டி.எம் கார்டுகளை வங்கிகள் தற்போது விநியோகிக்கின்றன. இதன் மூலம் ஏ.டி.எம் களில் எளிதாக பணம் பெறலாம். கார்ட்டை மட்டும் மிஷினில் காட்டினால் போதும். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என இரண்டு தவணையாக பெறலாம்.

பொருள்கள் வாங்கும் போது எந்த வித செயலும் இல்லாமல் கார்டுக்கு அருகில் பி.ஓ.எஸ் எனப்படும் பாயிண்ட் ஆப் சேல் மிஷின் மூலம் பணத்தை எடுக்க முடியும்.

அப்படி இந்த அட்டையில் என்ன விசேஷம்?

படத்தில் குறிப்பிடப்பட்டுளள வைஃபை குறியீடு கார்டில் இருந்தால் அதில் நியர் பில்டூ கம்யூனிகேஷன் என சிப் அந்த கார்டில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் பிஓஎஸ் மிஷனை  இதன் அருகில் கொண்டு சென்றால் போதும் நான்கு செ.மீ இடைவெளியில் கார்டு தொடர்பான அனைத்து விபரங்களும் பி.ஓ.எஸ் மிஷினுக்கு வந்துவிடும். இதன் மூலம் கடைகாரர் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

நம்முடைய அனுமதி இல்லாமல் பணம் திருடப்பட வாய்ப்பு உள்ளதே என வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண் மூலமாக இந்த வசதியை எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்கள். 

மேலும், நம்முடைய பாஸ்வோர்டு,  திருடு போவதை தடுக்கவும், நமது ஏ.டி.எம் கார்டு பின் நம்பர்களை  மற்றவர்கள் பயன்படுத்தி பணம் எடுப்பதை தடுப்பதற்காகவும் தான் இந்த வசதிகள் வங்கிகள்  செய்துள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது வாடிக்கையாளர்கள் கைகளில் உள்ளது என்கிறார்கள். 

எனவே இது போன்ற வைஃபை குறியீடு உள்ள ஏ.டிஎம் கார்டு உங்களிடம் உள்ளதா உஷார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com