இணைய வெளியினிலே...

இணைய வெளியினிலே...

குறைக்காதநாயும் இல்லைகுறை சொல்லாதவாயும் இல்லைஇவை இரண்டும் இல்லாத ஊரும் இல்லை
Published on

முக நூலிலிருந்து...

குறைக்காதநாயும் இல்லை
குறை சொல்லாதவாயும் இல்லை
இவை இரண்டும் இல்லாத ஊரும் இல்லை

-அம்மன் ரகுராமன்

தோல்விக்கான காரணங்கள் இரண்டு
யோசிக்காமல் செய்வது
யோசித்த பின்பும் செய்யாமல் இருப்பது

-பரசுராமன் தருமலிங்கம்

பணத்தைச்சிக்கனப்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும்!
வார்த்தைகளைசிக்கனப்படுத்தினால் உறவு நிலைக்கும்!!

-ராஜேந்திரன்

முயற்சித்து கொண்டே இரு; முடியாது என்ற சொல்
உன் அகராதியில் இருந்து நீக்கப்படும்வரை..!

-மோகனசுந்தரம்

சுட்டுரையிலிருந்து...

ஏற்றத் தாழ்வுகளை தீர்மானிப்பதுஜாதியோ, மதமோ இல்லை!
பணம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிது!!

-கனகாம்பரி

வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகள்
பாவ நிலை, பதட்ட நிலை, பரிதாப நிலை,இழப்பு நிலை, சோக நிலை!
இதெல்லாம் தாண்டி தான் வாழ்க்கையில சந்தோஷமே இருக்கு!

-ஆர்.சி.பி.அமுதவள்ளி

சந்தேகத்துக்குப் பிறகுவரும் நம்பிக்கை "ஆழமானது "
நம்பிக்கைக்குப் பிறகு வரும் சந்தேகம் "ஆபத்தானது'

-ஈரோடு வேலு

வலைதளத்திலிருந்து...

மனிதர்களுக்கு என்ன வேண்டும் எனும் நூலில் 18-ஆம் நூற்றாண்டு தத்துவஞானி ஆடம் பெர்குசன் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

"பொதுவாக மனிதர்கள் அமைதியை விரும்புவதாகச் சொன்னாலும் எப்போதெல்லாம் சமூகத்தில் அமைதியும், ஒழுங்கும் நிலவுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கடுமையாகப் போரடித்து ரகளையில் ஈடுபட்டதையே பார்த்திருக்கிறோம்.

அவர்களுக்கு ஸ்திரதன்மையை விட நிலையாமையே மிக பிடித்திருக்கிறது. அமைதியை விட போர் தான் பிடித்திருக்கிறது. தன்னை கடுமையான அச்சத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கும் எதிரிகள் மேல் தான் மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள். பாதுகாப்பை விட ஆபத்தை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பி ஆடும் விளையாட்டுகளும் ஆபத்தானவைதான்.'

எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடும் நிறுவனங்கள், குடும்பங்களில் பிரச்னை வர காரணம் இந்த மனப்பான்மையாக இருக்கலாம். (ஆனால் What do men really want என தான் பெர்குசன் எழுதுகிறார். அந்த காலத்தில் Men என எழுதுவது பொதுவாக மனிதர்களைக் குறிக்கும் வார்த்தை. அல்லது ஆண்களை மட்டுமே தனிப்பட்டு குறிப்பது என பொருள் கொண்டாலும் பிரச்னை இல்லை.

https://www.facebook.com/neander.selvan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com