வேலை... வேலை... வேலை...

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் மாதம் ரூ.44,900
வேலை... வேலை... வேலை...

இந்திய வனத் துறையில் வேலைவாய்ப்பு

நிறுவனம்: இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்

பணி:  கன்ஸர்வேட்டர் ஆஃப் பாரஸ்ட் 
காலியிடங்கள்: 25

பணி:  டெபுடி கன்சர்வேட்டர் ஆஃப் பாரஸ்ட்
காலியிடங்கள்: 20

தகுதிகள்: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://icfre.gov.inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Secretary,
Indian Council of Forestry Research and Education,
P.O New Forest, 
Dehradun – 248006.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.05.2022


மேலும் விவரங்கள் அறிய https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

உளவுத்துறையில் வேலைவாய்ப்புகள்


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  அசிஸ்டெண்ட் சென்ட்ரல்  இன்டலிஜென்ஸ்  ஆபிசர் ( டெக்னிக்கல்) (

கிரேட் - II)
காலியிடங்கள்: 150

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1.  கம்ப்யூட்டர் சயின்ஸ் &  இன்பர்மேஷன் டெக்னாலஜி
காலியிடங்கள்: 56
2. எலக்ட்ரானிஸ் &  கம்யூனிகேஷன் 
காலியிடங்கள்: 94
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் எம்.எஸ்சி., அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகளில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள் மட்டும் ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  www.mha.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 266 

பணி: ஸ்டைபென்டரி ட்ரைனி கேட்டகிரி -I
பணி: ஸ்டைபென்டரி  ட்ரைனி கேட்டகரி - II
பணி: சயின்டபிஃக் அசிஸ்டென்ட்/ஆ ( சேஃப்டி)
பணி: டெக்னிக்கல் /ஆ ( லைப்ரரி சயின்ஸ்)
பணி: டெக்னிஷியன்/ஆ (ரிக்கர்) 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

பணியிடம்: கல்பாக்கம், தாராபூர்
பணி:  ஸ்டைபென்டரி  ட்ரைனி கேட்டகிரி - I

காலியிடங்கள்: 72
1. கெமிக்கல்- 08
2. கெமிஸ்ட்ரி - 02
3. சிவில்- 05
4. எலக்ட்ரிக்- 13
5. எலக்ட்ரானிக்ஸ் - 04
6.  இன்ஸ்ட்ருமென்டேஷன் - 07
7. மெக்கானிக்கல் - 32

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.16,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.18,000

சம்பளம்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் மாதம் ரூ.44,900

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

பணி: ஸ்டைபென்டரி ட்ரைனி கேட்டகிரி - ஐஐ
பணியிடம்: கல்பாக்கம், தாராபூர்

காலியிடங்கள்: 189
1. ஏசி மெக்கானிக்  - 15
2. எலக்ட்ரிஷியன் - 25
3. எலக்ட்ரானிக் மெக்கானிக் - 18
4. பிட்டர் - 66
5. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 13
6. மெக்கானிஸ்ட்  - 11
7. டர்னர் - 04
8. வெல்டர் - 03
9.  டிராஃப்ட் மேன் ( மெக்கானிக்கல்) - 02
10. லேபரெட்டரி அசிஸ்டென்ட்  - 04
11. பிளான்ட் ஆப்ரேட்டர் - 28

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500

சம்பளம்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் டெக்னிசியன் பி பிரிவினருக்கு மாதம் ரூ.21,700, சி பிரிவினருக்கு ரூ.25,500

நேரடி பணி நியமனம்: கல்பாக்கம், மும்பை, தாராபூர்
மொத்த காலியிடங்கள்: 06  

1.  சயின்ட்டிபிக் அசிஸ்டென்ட் /ஆ (சேப்ஃட்டி) - 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400
2. டெக்னிஷியன்/ஆ ( லைப்ரரி சயின்ஸ்) - 01
3. டெக்னிஷியன்/ஆ (ரிக்கர்) - 04
சம்பளம்: மாதம் ரூ. 21,700

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன்  டிப்ளமோ முடித்தவர்கள், வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 22, 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
தேர்வு மையம்: எழுத்துத் தேர்வு மும்பை மற்றும் சென்னையில் மட்டும் நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://nrbapply.formflix.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://assets.formflix.com/myfile/NRB/ADVTNRB22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் 


எம்டிஎஸ் வேலை
பணி: மல்டி  டாஸ்கிங் ஸ்டாஃப்
காலியிடங்கள்: 31

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம்: அகமதாபாத், காந்திநகர்
விண்ணப்ப கட்டணம்: ரூ.200. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்     திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ipr.res.in/documents/jobs.career.html என்ற இணையதளம் மூலம் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு விளக்கம் காண recruitment@ipr.res.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com