இணைய வெளியினிலே...

தாவர மண்டலத்தின் அரசியல் காலனி ஆட்சி காலத்தில்மிகவும் முக்கியமானது. வெட்ப மண்டலத்தில் விளையும்தாவரங்களை தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் தங்களின் அதிகாரத்தாலும் பயிரிட முடியாது என்பதால்
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


எல்லா இலைகளும்
உதிர்ந்த பின்னும்
மொட்டை மரத்தில்
சட்டென்று மலர்கிறது,
சிறகசைக்கும் பூவொன்று...
ஒரு வண்ணத்துப் பூச்சி
அமரும் தருணத்தில்.

நேசமிகு ராஜகுமாரன்


எந்தச் சொல்லையும் எழுப்பிவிடாதே.
அதன் ஓசையில் எல்லாச்சொற்களும் எழுந்துவிடும்,
வேங்கைப் பசியில் வனம்
விழித்துக் கொள்வதைப்போல.
சொற்களிலிருந்து தப்பிக்கவும்
ஒரு சொல்தான் தேவை,
உன் பெயரைப் போல.

பழநிபாரதி

நிறைய உழைக்கத்
தெரிந்த அளவுக்கு,
கொஞ்சம் போல
நடிக்கத் தெரிந்திருந்தால்...
வாழ்வின் சில பள்ளங்கள்'
மேடாக மாறியிருக்கும்.
கடற்கரய் மத்தவிலாச

அங்கதம்

தலைக்குப் பின்னாலொரு
ஒளிவட்டத்தைப்
பொருத்திக் கொண்டிருக்கிற
எந்தவொரு மனிதனுக்கும்,
என்னளவுக்குச் சுதந்திர வாழ்வுக்கான
வாய்ப்பேயில்லை.
ஜெயாபுதீன்

சுட்டுரையிலிருந்து...


யாருமே உதவி செய்யாம
நீயே எழுந்து நின்னயே...
அப்போ உனக்கு வயசு 3.
இப்ப மட்டும் எதுக்கு பயப்படுற?

நட்சத்திரா


வயதில் ஒன்றையும்
அனுபவத்தை ஆயிரக்கணக்கிலும்
அதிகரிக்கச் செய்துவிட்டு...
அமைதியாக கிடக்கின்றது
என் பழைய காலண்டர்.

டீ இன்னும் வரலை

வலைதளத்திலிருந்து...


தாவர மண்டலத்தின் அரசியல் காலனி ஆட்சி காலத்தில்மிகவும் முக்கியமானது. வெட்ப மண்டலத்தில் விளையும்தாவரங்களை தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் தங்களின் அதிகாரத்தாலும் பயிரிட முடியாது என்பதால் மனிதர்களும் விதைகளும் காலனி ஆதிக்கத்தில் புலம்பெயர்ந்திருக்கின்றன. அதில் முக்கியமானது அவுரியும் கரும்பும்.

அவுரி இலையிலிருந்து துணிகளுக்குச் சாயம் பூசும் இயற்கை வண்ணத்தை அறிந்த ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்காவில் விளைந்திருந்த அவுரி விதைகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்து இந்திய விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி, அவுரி விளைச்சலை அறுவடை செய்தார்கள். தங்கள் விளை நிலங்களில் அவுரி போட்டு அவர்கள் நிர்ணயித்த விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு, இந்திய விவசாயிகள் நசுக்கப்பட்டார்கள். "அவுரி பயிரிடமாட்டோம்' என்று பெரிய போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டம் "சம்ப்ரான் சத்தியாகிரகம்' என்று அழைக்கப்படுகிறது.

அப்படித்தான் கரும்பும்.

தங்கள் குளிர்பிரதேசத்தில் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை தயாரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சர்க்கரை அதிகமாகக் கொடுக்கும் கரும்பை விளைவிக்க முடியவில்லை. பீட்ரூட்டிலிருந்து எடுக்க முடியும் சர்க்கரையின் அளவு கரும்புடன் ஒப்பிடும் போது சொற்பம். சர்க்கரை ஒரு சிலருக்கான நுகர்
பொருளாக மட்டுமே இருந்தது அவர்கள் தேசத்தில்.

அதனால் தங்கள் காலனி ஆதிக்கத்திலிருந்த இந்து மகாசமுத்திர தீவுகளான ஜாவா, சுமுத்திரா, மொரிஷியஷ் பகுதிகளில் கரும்பு பயிரிட்டு கரும்புத்தோட்டத்தில் வேலை செய்ய, கப்பல் கப்பலாக நம் மனிதர்களை ஏற்றுமதி செய்தார்கள்.

தேயிலை, காபி, ரப்பர், கொக்கோ என்று அவர்களின் கச்சாப்பொருள் தேவைகளுக்கு தங்கள் காலனி ஆதிக்க மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தார்கள். இன்றும் அதுவே வேறொரு வேடத்துடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அவர்கள் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள். நம் பிள்ளைகள் தங்கள் தூக்கம் கெடுத்து அவர்களுக்காக கணினி அடிமைகளாய் இருக்கிறார்கள்.

http://puthiyamaadhavi.blogspot.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com