வாட்ஸ்ஆப்... தமிழிலும் பயன்படுத்தலாம்!

வாட்ஸ்ஆப்... தமிழிலும் பயன்படுத்தலாம்!

தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் வாட்ஸ்ஆப் செயலிக்காகவே இன்று பலர் அறிதிறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்) பயன்படுத்தி வருகின்றனர். 

தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் வாட்ஸ்ஆப் செயலிக்காகவே இன்று பலர் அறிதிறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்) பயன்படுத்தி வருகின்றனர். 

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் சுமார் 50 கோடி வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில், பல்வேறு மொழி, கலாசாரங்களைக் கொண்ட இந்தியாவில் ஆங்கிலத்தைத் தவிர பிற மாநில மொழிகளிலும் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்தும் சேவை, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, உருது ஆகிய மொழிகளில் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வாட்ஸ்ஆப் செயலியின் முகப்பு மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால், அதில் உள்ள பல்வேறு வகையிலான சேவைகளின் தலைப்புகள் மாநில மொழிகளில் மாறிவிடும். ஆனால் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல்கள் பகிரப்பட்ட மொழிகளிலேயே இருக்கும் அதில் மாற்றம் வராது.

இந்தச் சேவையை ஆன்ட்ராய்டு போன்களில் பெற, வாட்ஸ்ஆப்பை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து விட்டு, வாட்ஸ்ஆப்பின் வலது மேல்பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, செட்டிங்ஸ் - சாட்ஸ் - சூஸ் ஆப் லாங்வேஜ்-க்குள் சென்று அதில் உள்ள பத்து மாநில மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்தால் போதும்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆன்ட்ராய்டு சேவையில் வாட்ஸ்ஆப் சுமார் 60 மொழிகளை வழங்கி வருகிறது. ஐபோனில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளை வாட்ஸ்ஆப் வழங்கி வருகிறது. 

இதேபோல், ஆன்ட்ராய்டு போன்களின் பயன்பாட்டையும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மாற்றவும் வழி உள்ளது. அதற்காக போன்களில் உள்ள - செட்டிங்ஸ்- சிஸ்டம் - லாங்வேஜ் அன்ட் இன்புட் - லாங்வேஜஸ் என்பதைத்  தேர்வு செய்தால் போதும். 

ஆங்கிலம் தெரியாதவர்களும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த மெட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com