பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டப்படிப்பு!

பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருக்கிறது என்பதில் உண்மை இருந்தாலும்,  பிளாஸ்டிக் பயன்பாட்டை உலகம் குறைத்துக் கொள்வதாக இல்லை.
பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டப்படிப்பு!
Published on
Updated on
1 min read


பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருக்கிறது என்பதில் உண்மை இருந்தாலும்,  பிளாஸ்டிக் பயன்பாட்டை உலகம் குறைத்துக் கொள்வதாக இல்லை.   பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதும் குறையவில்லை. இந்நிலையில் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை ஒருபுறம் மாணவர்கள் படிப்பதும், அது தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

சென்னை  கிண்டியைத் தலைமையகமாகக் கொண்ட சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ஜினியரிங் அண்ட்  டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனம்  நான்காண்டு பி.இ/ பி.டெக் (பிளாஸ்டிக் என்ஜினியரிங்/ டெக்னாலஜி) படிப்புகளை வழங்கி வருகிறது.  இந்தப் படிப்பை படித்தவர்கள் பிளாஸ்டிக் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களில்  வேலை செய்ய முடியும். இந்தப் படிப்பை முடித்துவிட்டு பணியில் சேர்ந்த பல மாணவர்கள், மேலும்  இத்துறையில் உள்ள மேற்படிப்புகளைப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்காண்டுகள் பட்டப் படிப்பில் சேர பிளஸ் டூ படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலைப்  பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்பை சென்னையில் மட்டுமல்ல,  சிப்பெட்டின் அஹமதாபாத், புவனேஸ்வர், ராய்ப்பூர் ஆகியவை இணைந்துள்ள பல்கலைக்கழகங்களில் பயிலலாம். பயில  விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணையதள முகவரிகளுக்குச் சென்று  கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். 

இணையதள முகவரிகள்:

சென்னை: ஐபிடி - அண்ணா யுனிவர்சிட்டி - http://www.annauniv.edu/  

அஹமதாபாத்: ஐபிடி - குஜராத் டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டி -  http://www.gtu.ac.in 

புவனேஸ்வர்: ஐபிடி - பிஜு பட்நாயக் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி -  http://www.bput.ac.in

லக்னெள: ஐபிடி -  டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் டெக்னிகல் யுனிவர்சிட்டி - https://aktu.ac.in

ராய்ப்பூர்: ஐபிடி - சட்டீஸ்கர் ஸ்வாமி விவேகானந்த் டெக்னிகல் யுனிவர்சிட்டி, பிலாய்  http://csvtu.ac.in/ew

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com