வேலை... வேலை... வேலை...

ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வேலை... வேலை... வேலை...

இந்து அறநிலைத்துறையில் வேலை

பணி: மருத்துவ அலுவலர் - 01
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.90,000 வழங்கப்படும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: செவிலியர் - 01
வயது வரம்பு: 35 வயதிற்குள்  இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: பல்நோக்கு மருத்துவமனை பணி யாளர்கள் - 01

வயது வரம்பு: 40 வயதிற்குள்  இருக்க வேண்டும். 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.6,000 வழங்கப்படும். 

மேலும் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் - 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.  

மேலும் விவரங்கள் அறிய: https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.03.2022

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலை 


பணி:  மார்க்கெட்டிங்  எக்ஸிகியூட்டிவ் 
காலியிடங்கள்: 100

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பணி: காண்ட்ராக்டர்  
காலியிடங்கள்: 100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை

விண்ணப்பிக்கும் முறை: https://www.ncs.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.ncs.gov.in/job}seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=YYDvTJ4Kk2E%3D&RowId=YYDvTJ4Kk2E%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  31.03.22

மத்திய அரசில் வேலை 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
பணி:  அசிஸ்டன்ட் எடிட்டர் (தெலுங்கு)  - 01
பணி:  போட்டோகிராபிக் ஆபீசர்- 01
பணி:  சயின்டிஸ்ட் "பி'  (டாக்ஸிகாலஜி)  - 01
பணி:  டெக்னிகல் ஆபீசர் (பப்ளிக் ஹெல்த் என்ஜினியரிங்)   - 04
பணி:  டிரில்லர் - இன் - சார்ஜ்  - 03
பணி:   டெபுடி டைரக்டர் ஆஃப் மைன்ஸ்  சேஃப்டி (மெக்கானிக்கல்)   - 23
பணி:  அசிஸ்டன்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்)  - 03
பணி:  சிஸ்டம் அனலிஸ்ட்   - 06
பணி:  சீனியர் லெக்சர் (ஜெனரல் மெடிசின்)  - 01
பணி: சீனியர் லெக்சர் (ஜெனரல் சர்ஜரி)   - 01
பணி: சீனியர் லெக்சர் ( டியூபர்குளோசிஸ் & ரெசிபிரேட்டரி  டிசீஸஸ்)  - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 31.03.2022 தேதியின்படி, 30  வயது முதல் 50 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

மேலும் விவரங்கள் அறிய:  https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2022


ரயில்டெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி

பணி: கிராஜுவேட் என்ஜினியர்ஸ், டிப்ளமோ என்ஜினியர்ஸ்
மொத்த காலியிடங்கள்: 103

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.1.2022 தேதியின்படி, 18 வயது முதல்  27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
உதவித் தொகை: பயிற்சியின்போது கிராஜு வேட் என்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 14,000, டிப்ளமோ என்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 12,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு: www.railtelindia.com அல்லது https://www.railtelindia.com/images/careers/PDFProvider%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.04.2022

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் வேலை

பணி:  ஜூனியர் அனலிஸ்ட்  
காலியிடங்கள்:  29
சம்பளம்: மாதம் ரூ. 34,400 - ரூ.1,15,700

தகுதி: வேதியியல் அல்லது உயிர்வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால்வளத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50 வயதுக்குள்  இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது வரம்பில்லை.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவை, பெண்கள் பிரிவைச் சேர்ந்த ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://mrb.tn.gov.in/pdf/2022/JA_notification_160322.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.04.2022

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை

பணி:  டார்க் ரூம் அசிஸ்டன்ட்  
காலியிடங்கள்: 209

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் டார்க் ரூம் அசிஸ்டன்ட் (கதிரியக்க உதவியாளர் சான்றிதழ்) பயிற்சியை முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000

வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை. 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவை, பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://mrb.tn.gov.in/pdf/2022/DRA_notification_160322.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.04.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com