

புடவையும் பூவும் இந்தியப் பெண்களின் அடையாள முத்திரைகள். "என்னதான் சொல்லுங்க புடவை கட்டி வந்தா தனி அழகுதான்- இந்த வார்த்தைகள் அவ்வப்போது நம் காதில் விழ கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளம் பெண்கள் அன்றாட வாழ்வில் புடவை கட்டுவதை விரும்புகிறார்களா? அல்லது சுடிதார், ஜீன்ஸ் பேண்ட்- டீசர்ட் என்று நவீன ஆடைகளை விரும்புகிறார்களா என்று கேட்டால், நகர்ப்புறத்து இளம் பெண்கள் புடவையைவிட சுடிதார், ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளையே விரும்புகின்றனர். படித்துக் கொண்டிருக்கும் அல்லது வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்கள் சுடிதார், ஜீன்ஸ் பேண்ட் என நவீன ஆடைகளிலேயே வலம் வருகின்றனர். நகர்ப்புறமென்ன தற்போது கிராமப்புறத்திலும் கூட சுடிதார் வந்துவிட்டது, பாவாடை- தாவணி கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
÷புடவை வேண்டாம் என்பதைவிட சுடிதார், ஜீன்ஸ் செüகரியமாக உள்ளது என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக உள்ளது. ஆனால் விழாக்களில் புடவைதான் என்று கண்டிப்பாகச் சொல்கின்றனர்.
÷ஆடம்பரமாகவும் செüகரியமாகவும் ஆடை அணிவதில் தவறில்லை. ஆனால் ஆபாசமாக ஆடை அணிவதை நிச்சயமாக பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. மற்றவர் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆடை இருக்கக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
காலத்துக்கு ஏற்றாற்போல் ஆடைகள் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் இந்த மாற்றம் நமது அடிப்படை கலாசாரத்தை, பண்பாட்டை சிதைப்பதாக இருக்கக்கூடாது.
பெண்களின் ஆடைகள் தான் ஒருவரை தவறாக நடக்கத் தூண்டுகிறது என்று வாதத்தில் உண்மையே இல்லை என்று மறுக்க முடியாது.
÷சென்னையில் உள்ள பெண்கள் தங்களுக்கு செüகரியமான ஆடைகளாக எதை நினைக்கிறார்கள்? பெண்களின் உடைகள் குறித்து அவர்களின் கருத்து என்ன? என்பது பற்றி சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இருக்கும் பெண்களின் கருத்துகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவி சங்கமித்ரை:
கல்லூரிகளைப் பொருத்தவரை நவீன உடைகளுக்குத் தடை போடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக மாணவிகள் அதனை மீறுவதைப் பார்க்க முடிகிறது. என்னைப் பொருத்தவரை சுடிதார் தான் செüகரியமான உடையாகக் கருதுகிறேன். சுடிதாரிலும் துப்பட்டாவை ஒழுங்காக மடித்து போட வேண்டும். கல்லூரி நாள்களில் சுடிதார் போட்டாலும், வெளியில் செல்லும்போது நீள பாவாடையுடன் (ரேப் அரெüண்ட்),சிறிய குர்தா, துப்பட்டாதான் என் தேர்வு.
அனிமேஷன் துறையில் பணிபுரியும் நதியா:
எங்கள் துறையைப் பொருத்தவரை ஆடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் நாங்களே சேர்ந்து எங்களுக்கென்று உடையைத் தீர்மானித்துக் கொண்டோம். ஸ்லீவ் லெஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிய மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளோம். அதிகமாக ஜீன்ஸ், குர்தாதான் என் சாய்ஸ். அரைகுறை குர்தாவாக இல்லாமல், நீளமான குர்தாதான் அணிவேன்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவ்வை சங்கமித்ரா:
சில ஐடி நிறுவனங்களில் நவீன உடைகளை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. சிலவற்றில் கட்டுப்பாடுகள் இல்லை. பணிபுரியும் நிறுவனத்தை நாங்கள் பிரதிபலிக்க வேண்டியுள்ளதால், சுடிதார், பட்டியாலா போன்ற ஆடைகளையே அணிவோம். ஆனால் வெள்ளிக்கிழமைகளில் நவீன உடைகளை அணியலாம் என்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாள்களில் சில பெண்களின் உடைகள் பெண்களுக்கே முகம் சுளிக்கும் அளவுக்கு உள்ளன. ஜீன்ஸ் உடன் சிறிய டீ-சர்ட்டுகள், குட்டைப் பாவாடைகள் என பெண்களின் உடைகள் அருவெறுப்பை ஏற்படுத்துகின்றன. கிராமத்தில் இருந்து வந்ததால் என் தேர்வு சேலைகள் தான். பிஸியான சென்னைக்கு சேலை ஒத்துவராது என்பதால், சுடிதார்களையே விரும்பி அணிகிறேன்.
பொறியாளரான ஆனி:
மற்றவர்களின் கண்ணை உறுத்தாத அளவிலும், நமக்கு செüகரியமாகவும் இருக்கும் உடைகள்தான் என் தேர்வு. அந்த வகையில் சுடிதார்தான் என் தேர்வு. சேலை அணிவதில் நாட்டம் இருந்தாலும், அலுவலகத்தில் ஏதாவது விழாக்கள் நடந்தால் மட்டுமே சேலை அணிவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.