

ஒரு மனிதனின் உடல் எப்போதும் சீரான தட்பவெப்பநிலையில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. குளிர் அதிகமாக இருக்கும் போது நமது உடல் தானாகவே வெப்பத்தை அதிகரித்தும், வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது வியர்வையை வெளிப்படுத்தி தோலை குளிரூட்டவும் செய்யும்.
நமது காதுகளில் வரும் ஒரு மெழுகு போன்ற திரவம் பற்றி பல விஷயங்களைப் படித்திருப்போம். ஆனால் அது பற்றிய ஒரு ஆய்வில், அதிகம் பயப்படும் நபர்களுக்கு காதுகளில் அதிகமாக இந்த மெழுகு உற்பத்தியாகிறதாம். இது எப்படி என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
உங்களை நீங்களே சிக்கிலிக்கா என்று கூறப்படும் கூசும் தன்மையை செய்து கொள்ள முடியாது. ஏன் என்றால், சிக்கிலிக்கா என்பது, உடலில் எதிர்பாராதவிதமாக செய்யப்படும் கூசும் தன்மையாகும். ஆனால், நமது கைகள் நமது உடலைத் தொடப்போகின்றன என்ற விஷயம் ஏற்கனவே மூளைக்குத் தெரிந்து விடும். எனவே மூளை அந்த உடல் பாகத்துக்கு அதற்கான எச்சரிக்கை உணர்வை தெரிவித்து விடுவதால் நமக்கு கூசுவதில்லை.
விலங்கினங்களில் சிரிக்கும் உணர்வு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதேப்போல, நம் உடலுக்கு ஏதேனும் காயம் ஏற்படும் போது நாம் கண்ணீர் விட்டு அழுதால், கண்ணீரில் இருந்து வரும் எதிர்ப்பு சக்தியின் மூலம் காயம் சீக்கிரம் ஆறுகிறது என்றும் அறிவியல் கூறுகிறது.
வாழ்நாள் முழுவதும் தனது அளவில் மாற்றத்தை செய்து கொண்டே இருக்கும் ஒரு உடல் உள்ளுறுப்பு அட்ரீனல் சுரப்பியாகும். இது கரு உருவாகி 7வது மாதத்தில் உருவாவதாகும். அப்போது சிறுநீரகங்களின் அளவுக்கு இருக்கும் இவை, பிறக்கும் போது சுருங்கி விடுகின்றன. இதேப்போலத்தான் ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் இது தனது அளவை சுருக்கியும், நீட்டியும் வைத்துக் கொள்கின்றன. மிகவும் வயதானவர்களுக்கு அட்ரீனல் சுரப்பியை பார்க்கக் கூட முடியாத அளவுக்கு சுருங்கிவிடுவதும் உண்டு.
ஒரு நிமிடத்துக்கு 13 முறை ஒவ்வொரு மனிதனும் கண்களை இமைக்கிறார்கள். அதிலும், பெண்கள், ஆண்களை விட அதிகமாக கண்களை இமைக்கிறார்கள்.
நமது சிறுநீரகப் பைகள் பார்க்க சிரியவையாக இருக்கலாம். ஆனால் அவை மிக அதிக அளவிலான சிறுநீரைத் தேக்கி வைக்கும் சக்தி கொண்டவை. எவ்வளவு சிறுநீரை தேக்கி வைத்தாலும், அவை எதுவும் ஆகாது. ஆனால், அது பாதி அளவுக்கு சிறுநீர் நிரம்பியதுமே நாம் கழிவறைக்குச் சென்று விடும் அளவுக்கு நமது உடல் தூண்டப்படுகிறது.
ஆண்களுக்கு, பெண்களை விட அதிகமாக வியர்வை துளைகள் செயல்பாட்டில் இருக்கும். அதேப்போல, பெண்களை விட ஆண்களுக்கு கொழுப்பைக் கரைக்கும் சக்தியும் வேகமும் அதிகமாக இருக்கின்றன.
உணவைச் செரிமானம் செய்யும் பணிகளில் முதன்மையானதை நமது எச்சில்கள்தான் செய்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.