

இன்று பலர் படுத்துக் கொண்டு பல மணி நேரம், வாட்ஸ்-அப் உட்பட பலவற்றில் வரும் பல தகவல்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படி பார்ப்பது நல்லதா?
நிச்சயமாகக் கிடையாது. அதிலும் குறிப்பாகத் தூக்கம் கெடும். அடுத்தநாள் காலை வேலை நேரத்தில் தூக்கம் வரும். கவனம் குறைந்து "டல்' அடிக்கும். மொபைலிலிருந்து வரும் வெளிச்சம் கண்களைப் பாதிப்பதுடன், கண்களில் கட்டிகள் தோன்றி உறுத்தவும் ஆரம்பித்துவிடும். நம்பினால் நம்புங்கள்; சிறு குழந்தைகள் கூட; மொபைலை வாங்கிக் கொண்டு கேம்ஸ் உட்பட பலவற்றை அதனில் பல மணி நேரம் பார்க்கிறார்கள்.
ஆ2 ல இஹழ்ங் நர்ப்ன்ற்ண்ர்ய்ள் என்ற நிறுவனம் இதுபற்றி ஆய்வில் இறங்கியது. முடிவு என்ன தெரியுமா?
இந்தியாவில் மொபைல் போனை 98 சதவிகிதம், இந்தியர்கள், தூங்கும் இடத்திலேயே வைத்துக் கொள்கிறார்கள். இப்படி மொபைல் போனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் முதலில் பாதிக்கப்படுவது ரெட்டினாதான்.
ரெட்டினாவில் போட்டோ ரெசிப்டர்கள்தான், கறுப்பு மற்றும் வெளுப்பை உணர்ந்து வெளிப்படுத்துவது, இதுதான் கறுப்பு வெள்ளையை நமக்கு உணர்த்தி தூங்கவும், விழிக்கவும் செய்வது. இது தொடர்ந்து மொபைல் வெளிச்சத்தைப் பார்க்கும்போது, பாதிக்கப்படும்.
மேலும்...
1. தொடர்ந்துப் பார்ப்பதால் கவனம் சிதறி, நினைவாற்றலும் குறையும்.
2. மொபைலிலிருந்து வரும் நீல வெளிச்சம் கண்களைப் பாதித்துப் பார்வைக்கும் வேட்டு வைக்கும்.
3. இந்த நீல வெளிச்சமும், கண்களில்
"ஸ்ரீஹற்ஹழ்ஹஸ்ரீற்’ வர முக்கிய காரணமா? என அறிய; ஆய்வு நடந்து வருகிறது. ரிசல்ட் என்னவாகுமோ?
4. இப்படி இரவில் பல மணி நேரம் பார்ப்பதுத் தொடர்ந்தால்; இரவு தூக்கத்துக்கே வேட்டு தான்.
5. இந்தத் தொடர் வெளிச்சம், மன
அழுத்தத்தையும் தோற்றுவிக்கலாம்.
6. குறிப்பாகப் பெண்களுக்கு இதன் மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்படவும் கூடும் எனவும் ஒரு பயமுறுத்தல் உண்டு. பெரும் சுரப்பி சார்ந்த புற்று நோய் வரலாமாம்.
7. ஹார்மோன்களில் சில பசியைத் தூண்டுபவை. தொடர்ந்து மொபைல் வெளிச்சத்தை பார்ப்பதின் மூலம், இத்தகைய ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, பசி அதிகமாகி, உடம்பும்
பெருக்கும்.
8. நீரிழிவு நோய் மற்றும் இதயம் ரத்தம் அணுக்கள் சார்ந்த வியாதிகள் ஏற்படலாம்.
இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
1. படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மொபைல் பார்ப்பதை நிறுத்திவிட வேண்டும்.
2. நமது வீடுகளில் டிவி திரைக்குக் கூடுதல் திரைப்போட்டு பார்ப்பது போல், மொபைலிலும் கூடுதல் திரைப்போட்டு பார்க்கலாம்.
3. 14 அங்குலமாவது, தள்ளிவைத்துக் கொண்டுப் பார்ப்பது நல்லது.
4. படுத்துக் கொண்டு அருகில் மொபைலை வைத்துக் கொண்டு, பார்ப்பதை, குறிப்பாக இரவில் அறவே தவிர்க்கவும்.
நாம் வாழ... சுலபமாக நடமாட மிகவும் அத்தியாவசியமானது கண்கள். ஆக அதனை முடிந்த வரை பாதுகாத்துப் பளிச்சென வைத்துக் கொள்வது நமது கடமை என்பதை உணருவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.