ஒலிம்பிக்குக்குப் பிறகு -மேரிகோம் அதிரடி

மேரிகோம் இந்தியாவின் மகளிர் குத்துச்சண்டை வீரர்களில் பிரபலமானவர்.
ஒலிம்பிக்குக்குப் பிறகு -மேரிகோம் அதிரடி
Published on
Updated on
1 min read

மேரிகோம் இந்தியாவின் மகளிர் குத்துச்சண்டை வீரர்களில் பிரபலமானவர். இவரின் வாழ்க்கை திரைப்படமாகக் கூட வெளிவந்தது. நாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.

 மேரிகோம் குத்துச்சண்டைப் போட்டிகளில் இருந்து விலகப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார். நல்லவேளை விலகல் ஒலிம்பிக்குக்குப் பிறகுதானாம்! காரணம் என்ன? மேரிகோம் சொல்கிறார்:

 ""தினமும் பயிற்சி செய்வது, மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தையும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமம். பயிற்சிக்குப் பலமணி நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. உலக குத்துச்சண்டை போட்டிகளில் ஐந்து தடவை வென்றிருக்கிறேன். ஆனாலும் என் கனவு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெறுவதுதான். லண்டன் ஒலிம்பிக்கில் அதைப் பெறுவேன் என்று நினைத்தேன். உழைத்தேன், முடியவில்லை. எனது அடுத்த இலக்கு, பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி. நிச்சயம் தங்கம் என்ற லட்சியத்தில் கடும்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அந்தப் போட்டிக்குப் பிறகு குத்துச்சண்டைப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது நிச்சயம். அதன்பிறகு எனது குத்துச்சண்டை அகாடமியில் நேரத்தைச் செலவழிப்பேன். குத்துச்சண்டை வீரர்களை  உருவாக்குவேன்.

ஒரு பெண்ணாக, தாயாக நானே இந்தத் துறையில் ஈடுபடும்போது இளைஞர்களால் இன்னும் சாதிக்க முடியும். அதற்கு ஒழுக்கம் மிக முக்கியம். அடுத்தது அர்ப்பணிப்பு உணர்வு. இவை இரண்டும் சேர்ந்தால் எந்த விளையாட்டிலும் நம்பர் ஒன்தான்!' என்கிறார் மேரிகோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com