கன்னம் பளபளக்க...

கன்னம் பளபளக்க...
Updated on
1 min read

கன்னத்தை செழுமையாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க சில குறிப்புகள்:

  தினமும் குளிப்பதற்கு முன் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய்யுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

  முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதை தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களை பொலிவிழக்கச் செய்துவிடும்.

  அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச் சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததும் கன்னம் ஒட்டிப் போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும்.

  தினமும் உணவில் நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ஃப்ரெஷ் கன்னம் கிடைக்கும்.

  தோலுக்குத் தேவையான எண்ணெய்ப்பசை இல்லாத போது கன்னப்பகுதியும் வறண்டு சுருங்கி போய் காணப்படும். தினமும் பாதாம்பருப்பு, பிஸ்தா, சாரை பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட்டு வரவும். தோலில் எண்ணெய்ப்பசை சுரப்பதற்கு இந்த பருப்பு வகைகள் உதவும்.

  இதனால் முக சுருக்கங்கள் மறைவதுடன் ஒடுங்கிய தாடைப்பகுதியில் சதைப்போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப்பகுதியிலிருந்து காது வரை அப்பி தினமும் ஃ பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால் - ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும்.

  ஒரு கப் பாலில் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு மேசைக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலை சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அல்லது) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும் சதைப்பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.

  மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை குடித்து வந்தால் கன்னத்தில் சதைப்போட்டு கலர் பளபளப்பு கூடும்.

  ஒரு மேசைக்கரண்டி தேனுடன் அரைத்த பப்பாளி விழுது ஒரு மேசைக்கரண்டி சேர்த்து கலந்து பத்து நிமிடம் பேக் போட்டு கழுவினால் தேன் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி கன்னத்தை பளபளப்பாக்கும்.

- பெண்களுக்கான அழகுக்குறிப்பும் அழகான குறிப்பும் நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com