இங்கிலாந்து கோமகள்

மாபெரும் சரித்திரத் திருப்பமாக இங்கிலாந்து மகாராணியாக வாய்ப்புப் பெற்றவர் எலிசபெத்.

மாபெரும் சரித்திரத் திருப்பமாக இங்கிலாந்து மகாராணியாக வாய்ப்புப் பெற்றவர் எலிசபெத்.

எலிசபெத்தின் தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு இரு மகன்கள். மூத்தவர் எட்வர்ட், இளையவர் ஆல்பர்ட். இங்கிலாந்தின் மன்னராட்சி மரபுப்படி மன்னர் அல்லது ராணியின் மூத்த மகன் அல்லது மூத்த மகளுக்கு அரசுரிமை வழங்கப்படும்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மறைவுக்குப் பின் மன்னரானார் எட்வர்ட்.

அதேநேரத்தில் மன்னர் எட்வர்ட், அமெரிக்கப் பெண்மணியான வாலிஸ் சிம்ப்சன் மீது காதல் வயப்பட்டார். அவரோ விவாகரத்து பெற்றவர். இவர்களின் காதல், இங்கிலாந்தின் அரசமரபுக்கு முறையற்றதாகக் கருதி விமர்சிக்கப்பட்டது. மன்னர் எட்வர்ட் முன்பு காதலா அல்லது அரசர் பதவியா என்ற கேள்வி எழுந்தது.

மன்னராகத் தொடர விரும்பினால் வாலிஸ் சிம்ப்சனை கைவிட வேண்டும்; வாலிஸ் சிம்ப்சனுடன் வாழ்க்கை என்றால் அரசர் பதவியைத் துறக்க வேண்டும். ஆயிரத்து 200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இங்கிலாந்து அரச பரம்பரையில் ஆட்சியே பிரதானம் என்று கருதுபவரே அதிகம். ஆனால் எட்வர்ட் தனக்கு அரச பதவி முக்கியமல்ல; காதலியே முக்கியம் என்றும் - சாதாரணக் குடிமகனாக வாலிஸுடன் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.

 எனவே, புதிய மன்னராக எட்வர்ட்டின் தம்பி ஆல்பர்ட் மன்னராக்கப்பட்டார். அது முதல் அவர் ஆறாம் ஜார்ஜ் மன்னர் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு இரு மகள்கள். மூத்தவர் எலிசபெத் அலக்ஸாண்ட்ரா மேரி. இளைய மகள் பெயர் மார்கரெட். எலிசபெத் 15 வயதிலேயே கிரேக்க நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசரான பிலிப் மீது காதல் கொண்டார். அந்தஸ்தில் இங்கிலாந்து அரச பரம்பரையினர் மாபெரும் செல்வச் செழிப்பு கொண்டவர்கள். மன்னர் ஆறாம் ஜார்ஜ் இவர்களது காதலை அங்கீகரிக்கவில்லை. ஆனால், எலிசபெத் தனது தந்தையான மன்னரைச் சம்மதிக்க வைத்தார். இவர்களின் திருமணம் 1947-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு சார்லஸ் (1948) ஆனி (1950) அடுத்தடுத்து பிறந்தனர். அதற்குப் பிறகு ஆண்ட்ரூ, எட்வர்ட் இருவரும் பிறந்தனர்.

இந்தநேரத்தில் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு (6-2-1952) அரசுரிமை எலிசபெத்துக்கு வந்தது. ஆறாம் ஜார்ஜுக்குப் பிறகு 1952-இல் பிரிட்டிஷ் அரசியாக எலிசபெத் முடிசூட்டிக் கொண்டார். இவரின் கொள்ளுப்பாட்டியான விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள், 216 நாள்கள் அரசியாக இருந்து சாதனை படைத்தவர். அந்தச் சாதனையை எலிசபெத் தற்போது முறியடித்திருக்கிறார். இவரைப் போலவே பட்டத்துக்குரிய இளவரசராக சார்லஸும் 66 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com