கூந்தல் டிப்ஸ்

நெல்லிப் பொடியைத் தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்கு வளரும்.
கூந்தல் டிப்ஸ்
  • நெல்லிப் பொடியைத் தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்கு வளரும்.

  • பெண்களுக்கு நரை விழாமல் இருக்க கறிவேப்பிலைத் துவையல், வெங்காயம், கீரை மற்றும் பசும்பால், பூசணிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

  • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை அலசி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.

  • நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை நீங்கி முடி கறுப்பாகமாறும்.

  • கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.

  • வெந்தயம், குன்றிமணிப் பொடி ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

  • செம்பருத்திப் பூக்களை காயவைத்து தூள் செய்து கொண்டு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தடவி வந்தால் முடி கருப்பாகும்.

  • முடி உதிர்ந்த இடத்தில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலைக்கு தடவ வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com