பத்மலட்சுமி எனும் புதுமை!
பத்ம லட்சுமி.. பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி. சென்னையில் வைத்யநாதன் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்தவர் பத்மலட்சுமி.


பத்ம லட்சுமி.. பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி. சென்னையில் வைத்யநாதன் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்தவர் பத்மலட்சுமி.

முதலில் ஸ்பெயினிலும், பிறகு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ், ஏர்செஸ்டரில் உள்ள கிளார்க் பல்கலைக் கழகத்திலும் படித்தார்.
ஸ்பெயினில் படித்தபோதே மாடலிங் செய்ய அவருக்கு அழைப்பு வந்தது.
படிப்பு முடிந்ததும் மாடலிங்கில் ஈடுபட்டு, விரைவிலேயே பாரீஸ்... மிலன் மற்றும் நியூயார்க் நகரங்களில் பிரபலமானார்.
இதன் விளைவு அமெரிக்க டிவியில், நிகழ்ச்சியை நடத்தவும் நடிக்கவும் வாய்ப்பு வந்தது.
ஓர் இந்திய பெண், அமெரிக்க டிவியில் முதன் முதலாக வாய்ப்பு பெற்றவர் பத்ம லட்சுமிதான்.
‘Top Chef’என்ற நிகழ்ச்சிக்கு முதலில் இணை தயாரிப்பாளராகவும், பிறகு தயாரிப்பாளராகவும் மாறி, தானே அதில் தோன்றி மொத்தம் 88 எபிசோட்களை வழங்கினார். இதன் மூலம் மேலும் பிரபலமானார்.
இதே சமயம் சீரியல்களிலும், தொலைக்காட்சிக்குரிய படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.
இவருடைய ‘Royal Pain’ மற்றும் “3D rook’ டிவி படங்கள் மிகவும் பிரபலமானவை.
இதே சமயம், தன்னிடமிருந்த குறிப்புகளுடனும் தன் பாட்டி, தனது தாயார் அவ்வப்போது சேகரித்து வைத்திருந்த சமையல் குறிப்புகளையும் தொகுத்து சமையல் புத்தகங்கள் வெளியிட ஆரம்பித்தார்.
இவருடைய “Easy Exotic’ என்ற சமையல் புத்தகம் நன்கு விற்பனையானது. 1999-ஆம் ஆண்டின் முதலாவது சிறந்த சமையல் புத்தகம் என்ற அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
2001-அக்டோபரில், ‘பஹய்ஞ்ஹ், பஹழ்ற் ஏர்ற் & நஜ்ங்ங்ற்’ என்ற பெயரில் அடுத்த நூல் வெளியானது.
2016 - ஆம் ஆண்டு ‘Love, lors and what we ate’ என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதை மற்றும் சமையல் குறிப்புகள் இணைந்த மற்றொரு புத்தகத்தையும் வெளியிட்டார்.
மூலிகை செடிகள் மற்றும் மசாலா பொருட்கள் சார்ந்து மேலும் ஒரு நூலை தற்போது எழுதி வருகிறார். இதன் தலைப்பு ‘உய்ஸ்ரீஹ்ஸ்ரீப்ர்ல்ங்க்ண்ஹ ர்ச் ள்ல்ண்ஸ்ரீங்ள் & ட்ங்ழ்க்ஷள்’. இந்த நூல் வரும் அக்டோபர் 4 -ஆம் தேதியன்று வெளியாகுமாம்.
"நானே ஒரு புதுமை, என் உடலமைப்பே சோழர்கால வெண்கலச் சிலை போன்றது' என பெருமைப்படும் பத்மலட்சுமியின் புகைப்படம், அமெரிக்க ‘டங்ர்ல்ப்ங்’ இதழில் உலகின் 100 அழகிய பெண்கள் வரிசையில் இடம்பெற்றது. சமீபத்தில் ‘Encyclopedia of spices & herbs’ அளித்து கௌரவித்துள்ளது.
பத்மலட்சுமிக்கு 5 மொழிகள் தெரியும்.
45 வயதாகும் பத்மலட்சுமி இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் பிரபல மாடல், நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பிரபலமாகியிருக்கும் இவரை உருவாக்கியது இவரின் அனுபவங்கள்தான் என்கிறார். இவருக்கு ஒரே மகள். அவளின் முன்னேற்றமே தனது லட்சியம் எனக் கருதி அதற்காகவே வாழ்வதாகக் கூறுகிறார்.
உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள, மாவு, சர்க்கரை, மாமிசம், ஆல்கஹால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...