மூச்சு திணறல் என்றால் எச்சரிக்கையாக இருங்கள்!

இறந்துவிட்டார்  என மருத்துவமனை அறிவித்து ; 15 மணி நேரம் கழித்து; மயானத்திற்கு  தூக்கிச் செல்லும் போது, உயிர் திரும்பினால் அதனை என்ன சொல்லுவது? புனர்ஜென்மம் என அழைக்கலாமா?
Updated on
1 min read

இறந்துவிட்டார்  என மருத்துவமனை அறிவித்து ; 15 மணி நேரம் கழித்து; மயானத்திற்கு  தூக்கிச் செல்லும் போது, உயிர் திரும்பினால் அதனை என்ன சொல்லுவது? புனர்ஜென்மம் என அழைக்கலாமா?

 படத்திலுள்ள பத்மாபாய் லோதா ராஜஸ்தானை சேர்ந்தவர்.  59 வயதாகும் இவருக்கு மே 16-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் வென்டிலேட்டர் வைக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இறந்துவிட்டார் என மருத்துவமனை  நிர்வாகம் அறிவித்தது. பிறகு அடுத்த நாள் காலை 9 மணிவரை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டார்.

இதனிடையே ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ் நாட்டில் இருக்கும் அவருடைய சொந்தபந்தங்கள், மும்பையில் வசிக்கும் இருமகள்களுக்கு தகவல் சென்று அவர்களும் விமானத்தில் பறந்து வந்தனர்.

17-ஆம் தேதி, மருத்துவமனையிலிருந்து உடல் எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகளுக்கான சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் அவர் அருகில் அமர்ந்து கூர்ந்து அவரை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி! அவரது உடலில் சில அசைவுகள் ஏற்பட, அடுத்த சில நிமிடங்களில், பத்மாபாய் சுவாசிப்பது நன்கு தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஐசி வார்ட்டில் சேர்க்கப்பட்டு, உடல்நிலையில் நல்ல

முன்னேற்றம். சீக்கிரம் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிவித்தது.

இதனிடையே பத்மாபாய்க்கு உயிர் திரும்பியதால் நெருங்கிய உறவுகளிடையே சந்தோஷம்.

ஆகவே, மூச்சுத்திணறலால் ஒருவருக்கு மூச்சு ஒரு கட்டத்தில் நின்று விட்டாலும், தானே, திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து இத்தகைய நோயாளிகளிடம் அதிக  கவனமும் பரிவும் காட்டி, மீண்டும் வாழ வைப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com