சென்னை பண்பலைகளில் நிகழ்ச்சிகள் சினிமா தொடர்பானதுதான். சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு மாற்றத்தை நோக்கி என்ற நிகழ்ச்சியை ரெயின்போ பண்பலையில் வாரம்தோறும் நடத்தி வருகிறார் ரேடியோ தொகுப்பாளர் சிவரஞ்சனி சதாசிவம். அடிப்படையில் கணினி பொறியியலில் பட்டம் பெற்றார். ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதோடு, வார இறுதி நாட்களில் சமூக மாற்றங்களுக்கான நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்.
பண்பலை தொகுப்பாளராக பணியாற்றும் ஆர்வம் எப்படி வந்தது?
ஈரோட்டில் வெள்ளாளர் அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி படிக்கும்போதிலிருந்தே பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதில் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தது. கட்டுரைப்போட்டி முதல் கொண்டு ஒன்றையும் தவற விட மாட்டேன், எனது ஆசிரியர்களும் உற்சாகமூட்டினார்கள். பொதுவாகவே எனக்கு நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. அதனாலேயே கல்லூரி நூலகத்தில் பகுதி நேரத்தில் வேலை பார்த்தேன். பின்பு, சத்தியமங்கலத்தில் கணினி பொறியியல் படிக்கும்போது படிப்பு சுமை அதிகமாக இருந்ததால் கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆதனால், என்னுள் இருக்கும் ஆர்வங்கள் குறைந்து போக கூடாது என்பதற்காக வலைப்பக்கங்கள் தொடங்கி எழுத ஆரம்பித்தேன். அந்த வலைப்பக்கங்கள் கல்லூரி நண்பர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பண்பலை அலைவரிசையை தேர்ந்தெடுத்தது ஏன்?
நாமக்கல்லில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்துக்காக அரசு ஒரு சமூக பண்பலை தொடங்க இருப்பதாக அரசு விளம்பரத்தை பத்திரிகையில் பார்த்தேன். அப்போது நான் கல்லூரியில் கடைசி ஆண்டு. பகுதி நேர வேலையாக நாமக்கல் சென்று பயிற்சியை மேற்கொண்டேன். அங்குதான் விவசாயம் சார்ந்த விஷயங்களை அதிகமாக தெரிந்துக்கொண்டேன். மேலும், அங்கு சமூக பண்பலை தொடங்கியபோது, நான் பொறியியல் பட்டதாரி என்பதால் கணினி சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அப்போதுதான் பண்பலையில் பணியாற்றுவதற்கான ஆர்வம் தொடங்கியது.
ரெயின்போ பண்பலையில் பணியாற்றும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
சென்னையில் ஐடி துறையில் பணியாற்ற வந்ததும், ரெயின்போ பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முக தேர்வில் பங்கேற்க சென்றேன். அங்கு பெரும் கூட்டமே நின்றுக் கொண்டிருந்தது. சென்னையை சொந்த ஊராக கொண்டவர்களே அதிகம். என் திறமை மீது நம்பிக்கை இருந்தது. கடைசியில் நான் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்வானேன்.
மாற்றத்தை நோக்கி நிகழ்ச்சியை நடத்துவது பற்றி?
வாரம்தோறும் சுற்றுச் சூழல், சமூக அவலங்கள் ஆகியவற்றினால் அடங்கிய தலைப்புகளை எடுத்துக்கொண்டு, அந்த துறைகளில் இருக்கும் வல்லுநர்களிடம் காரணமும், தீர்வும் கேட்கப்பட்டு மக்களுக்கு பண்பலை வாயிலாக ஒலிபரப்பி வருகிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த நிகழ்ச்சியும், மாற்றுத்திறன் குழந்தைகள், மற்றும் போதை ஒழிப்பு குறித்த நிகழ்ச்சிகள் மனதுக்கு நிறைவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


