ஏர்ஹோஸ்டஸ் வரலாறு

விமானங்களில் பணிப்பெண்களுக்குப் பெயர் ஏர்ஹோஸ்டஸ்.  ப்ளைட் அட்டன்டெண்ட், ஸ்டூவர்ட்ஸ், கேபின் அட்டன்டெண்ட் என்ற மாற்றுப் பெயர்களும் இவர்களுக்கு உண்டு.
ஏர்ஹோஸ்டஸ் வரலாறு
Updated on
2 min read

விமானங்களில் பணிப்பெண்களுக்குப் பெயர் ஏர்ஹோஸ்டஸ்.  ப்ளைட் அட்டன்டெண்ட், ஸ்டூவர்ட்ஸ், கேபின் அட்டன்டெண்ட் என்ற மாற்றுப் பெயர்களும் இவர்களுக்கு உண்டு.

இவர்களின் அடிப்படை வேலை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சௌகரியங்களைக் கவனித்துக்கொள்வது.

ஆரம்ப காலங்களில் இம்பீரியல் ஏர்லைன்ஸ், தன்னுடைய விமானங்களில் ஆண்களைத்தான் "கேபின் பையன்'களாக நியமித்தது.

அமெரிக்காவின் ஸ்டவுட் ஏர்வேஸ், 1926ஆம் ஆண்டில் முதன் முதலாக அதிகார பூர்வமாக ஸ்டூவர்ட்ûஸ நியமனம் செய்தது. அமெரிக்காவின் டெட்ராய்ட் மற்றும் மிட்சிகன் க்ராண்ட் ராபிட்ஸ் இடையே பறந்தது இந்த விமானம். அதைத் தொடர்ந்து, வெஸ்டர்ன் ஏர்வேஸ் (1928), மற்றும் பான் அமெரிக்கா ஏர்வேஸ் (1929) ஆகிய நிறுவனங்கள் ஸ்டூவர்ட்ஸ்களை நியமித்தன.

முதலில், பதிவு செய்யப்பட்ட நர்ஸ்கள் மட்டுமே இந்த வேலையில் சேரமுடியும் என்ற நிபந்தனை இருந்தது. அதன் பிரகாரம் தேர்வான முதல் நர்ஸ், 25வயது எலென் சிஞ்ச். நியமிக்கப்பட்ட ஆண்டு 1930. அதன்பின், பல விமான நிறுவனங்கள் இதைப் பின்பற்றத் தொடங்கின. இரண்டாவது உலகப்போரின்போது இந்த நிபந்தனை முடிவுக்கு வந்துவிட்டது. காரணம், நர்ஸ்கள் ராணுவத்தில் சேர ஆரம்பித்து விட்டனர்.

1935-இல் டிரான்ஸ் கான்டினென்டல் மற்றும் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், விமான பணிப்பெண்கள் 35 பேர் தேவை என விளம்பரம் செய்தன. இதற்கு 2000 பேர் விண்ணப்பித்திருந்தனர். விளம்பரத்தின் உட்கருத்து: ""வயது 20-26; உயரம் 5அடி 5.4அங்குலம்; எடை 100-118 (?); சிறியவராய் எடுப்பாய் இருக்கவேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

1966}இல், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இப்படி விளம்பரம் கொடுத்தது: ""20வயது (191/2 வயதுள்ளோரும் விண்ணப்பிக்கலாம்). உயர் பள்ளி பட்டதாரி, திருமணமாகாதவர், விவாகரத்தாகி குழந்தைகள் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். கண்பார்வை கிளாஸ் போடாமல் 20/40 பார்வைத் திறன் இருக்கவேண்டும். விமானங்களில் கல்யாணமாகாத பெண்களுக்கே வேலை, கல்யாணமானால் டிஸ்மிஸ்!''.

1958-இல் முதன்முதலாக ஆப்ரிக்க-அமெரிக்க கலப்பினப்பெண், விமான பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஆறு மாதத்தில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். காரணம் அவருக்குத் திருமணம் நிச்சயமானது தெரிந்துவிட்டது. இதேபோல், 32-35 வயதுடைய பெண்கள், வயதாகிவிட்டது என்ற காரணத்தால் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். பணிக்காலத்தில் உடல் எடை ஜாஸ்தியான பெண்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

1980-இல்தான், திருமணம் கூடாது என்ற கொள்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. 1990-இல், பணிபுரியும் பெண்ணின் எடை அவரின் உயரத்திற்கு ஏற்ப இருக்குமானால் அனுமதி உண்டு என மாற்றப்பட்டது. 

ஏர்ஹோஸ்டஸýக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால், பல விமானங்களில் கூடுதல் அலவன்ஸ் தரப்பட்டது.

ஆரம்ப காலத்தில் ஏர்ஹோஸ்டஸ் சீருடைகள் ராணுவ உடைகள் போன்று கெட்டியாக இருக்கும். இவை குளிர்காலத்தில் நேவி புளூ நிறத்திலும், வெயில் காலத்தில் காக்கி நிறத்திலும் இருக்கும். இவர்களின் ஆடைகளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களும், சில தனியார் வடிவமைப்பாளர்களும் உருவாக்கித் தந்தனர்.

எகிப்து ஏர், ஈரான் ஏர், சவுதி ஏர் விமானங்களில் ஏர்ஹோஸ்டஸ்கள் இஸ்லாமிய  முறைப்படி ஆடைகளை அணிந்துகொள்கின்றனர். இந்தியா உள்பட பல நாடுகள், தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய ஏர்ஹோஸ்டஸ்களுக்கு உத்தரவிடுகின்றன.       

விமானங்களில் புதிதாக வேலைக்குச் சேரும் ஏர்ஹோஸ்டஸ்களுக்கு குறைந்தபட்சம் 4வாரம் முதல் அதிகபட்சம் 6மாதம் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஏர்ஹோஸ்டஸ்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்றே நாடு முழுவதும் பள்ளிகள் உண்டு.

ஏர்ஹோஸ்டஸôக மிக நீண்டகாலம் பணிபுரிந்த பெருமை ரான் அகன்னாவுக்கு உண்டு. இவர் 1949இல் இணைந்து 2012இல் ஓய்வுபெற்றார். அதாவது 63 வருடங்கள் இவர் பணியில் இருந்திருக்கிறார். இது எப்படி என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. 

நீரஜா என்ற ஏர்ஹோஸ்டஸூக்கு 1986இல் இந்திய அரசு "அசோக சக்ரா விருது' வழங்கியுள்ளது. 

நீரஜா பணிபுரிந்த பான்ஆம் விமானம்-73இல் தீவிரவாதிகள் நுழைந்து பயணிகளிடம் தொல்லை கொடுத்தபோது, அதனைத் தடுக்க முயன்ற நீரஜா சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய வீர தீரச் செயலுக்காக "அசோக சக்ரா விருது' வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com