வடாம் டிப்ஸ் ...

வடாம் மாவில் கடைசியாக கொஞ்சம் மீதமிருக்கும் பொழுது அதில் பூஸ்ட் அல்லது போர்ன்விட்டாவை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் நன்றாகக் கரைத்து மாவில் சேர்த்து பிறகு வடாம் பிழியுங்கள்.  வித்தியாசமான கலரில் சாக்லேட் மணத்துடன் வடாம் ரெடி.
வடாம் டிப்ஸ் ...

<  வடாம் மாவில் கடைசியாக கொஞ்சம் மீதமிருக்கும் பொழுது அதில் பூஸ்ட் அல்லது போர்ன்விட்டாவை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் நன்றாகக் கரைத்து மாவில் சேர்த்து பிறகு வடாம் பிழியுங்கள்.  வித்தியாசமான கலரில் சாக்லேட் மணத்துடன் வடாம் ரெடி.

<  ஜவ்வரிசி வடாம் முத்துமுத்தாக  இருக்க வேண்டுமென்றால் ஊறவைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

<  வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்கக் கற்களை பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருந்து மண், தூசி விழாது.

<  வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு  சற்று குறைவாக இருந்தால்தான் காய்ந்தபிறகு உப்பு சரியாக இருக்கும்.

<  அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து அரைக்காமல், முதல் நாள் இரவே ஜவ்வரிசியை, ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேகவைத்து அரிசி மாவுடன் சேர்த்துச் செய்தால் வடாம் நன்கு வெள்ளையாக இருக்கும்.

<  வடாம் வைத்திருக்கும் பாத்திரத்தில்  சிறிது பெருங்காயத்தூளைப் போட்டு வைத்தால் அதிக நாட்கள் வடாம் கெடாமல் இருக்கும்.

<  டப்பாவில் புதிய வடாம்களை போடுவதற்கு முன்னால் பழைய வடாம்களை ஒரு பாலிதின் கவரில் போட்டு கவருடன் டப்பாவின் மேலாக வைத்திருந்து முதலில் அதை உபயோகித்துவிட வேண்டும்.

<  வற்றல், வடாம் போன்றவற்றை நன்கு காய வைத்து பாலிதின் கவரில் போட்டு டப்பாவில் வைத்தால் பூச்சி வராமல் இருக்கும்.

<  வடாம் வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சம் கறிவேப்பிலையையோ துளசியையோ போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

<  இன்ஸ்டன்ட் வடாம் செய்ய இதோ ஓர் ஐடியா. இரண்டு ஆழாக்கு அரிசியுடன் அரை ஆழாக்கு ஜவ்வரிசி சேர்த்து குக்கரில் சாதமாக வடித்துக் கொள்ளுங்கள். வடித்த  சாதத்துடன் பொடியாக நறுக்கிய 4-5 பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் ஓரிரு நிமிடங்கள் அரைத்தால் வடாம் மாவுத் தயார். அதை அச்சில் போட்டு வடாமாக பிழிய வேண்டியதுதான். மாவு நீர்த்திருந்தால் ஜவ்வரிசி வடாம் போல வட்டமாக ஊற்றிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com