

பதினெட்டு வயதில் கணினி முன் அமர்ந்து தன் கற்பனையில் தோன்றியதைப் படபடவென்று பதிவு செய்து வந்த திவ்யா ஷா, அது சிறிது நாளில் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. திவ்யா ஷா இன்று ஆங்கில இலக்கிய வட்டத்தில் பிரபலம். அவர் எழுதிய "அ 20-நர்ம்ங்ற்ட்ண்ய்ஞ் இர்ர்ப் ஈன்க்ங்' என்ற நாவல் பரபரப்பாக விற்பனையாகிறது. இந்திய அரசின் வெளிநாட்டு உறவு அமைச்சகம் 200 பிரதிகள் வாங்கி வெளிநாடுகளில் உள்ள இந்திய அலுவலகங்களின் நூலகத்தில் வைத்துள்ளது. டில்லி நகரைச் சேர்ந்த திவ்யா ஷா கணினி
விஞ்ஞானத்தில் தொழிநுட்ப பட்டதாரி. திவ்யா ஷா சொல்கிறார்:
""நான் அடிப்படையில் ஒரு புத்தகப் புழு. வாசிப்பு சிறுவயதில் தொத்திக் கொண்ட பழக்கம். வாசிக்க.. வாசிக்க நாமும் எழுத முயற்சித்தால் என்ன.. என்று தோன்றியது. நான் தினம் தினம் நேரிடும் அனுபவங்களை... சந்திக்கும் மனிதர்களைக் குறித்து டைரியில் எழுதத் தொடங்கினேன்... சில வருடங்கள் ஓடின. இத்தனை நாட்கள் எழுதியதைத் தொகுத்து நான் தொடங்கிய வலைப்பூவில் பதிவேற்றம் செய்தேன். நடுநடுவே பெண்கள் தொடர்பான செய்திகளை, கட்டுரைகளை வலைப்பூவில் எழுதி வந்தேன். இப்படி எழுத ஆரம்பித்தது எனது பதினான்காம் வயதில் மாணவர் எழுத்தாளர் என்ற விருதினைப் பெற்றுத் தந்தது. பதினாறாம் வயதில், டெல்லியில் பிரபல ஆங்கில நாளிதழ், இளம் ஆசிரியர் என்ற கெüரவத்தை வழங்கி சிறப்பித்தது.
ஒரு நாள் படுக்கையில் கிடந்த போது என் கற்பனை விழித்துக் கொண்டு என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது. அதை அப்படியே விட்டால் சரியாகாது.. எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கணினி முன் அமர்ந்தேன். என் கற்பனைகளை, மனதில் தோன்றும் நினைவுச் சிதறல்களை தினமும் பதிவு செய்து வந்தேன். பிறந்தது, வளர்ந்தது, பார்த்தது, படித்தது.. நான் காணும் கனவு என்று எழுத்து ஊர்வலம் நீண்டு போனதுதான் உண்மை. பதிவுகள் தொடர்ந்தன. வாழ்க்கையில் சாகசம் செய்யும் துணிச்சலான தைரியமான கதை நாயகியை உருவாக்கினேன். அவளுக்கு ஆயிஷா என்று பெயரும் வைத்தேன். ஆயிஷா, வாழ்க்கை சக்கரம் சுற்றும் போது அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.. அவற்றை அவள் எப்படி சமயோசிதமாக சமாளித்தாள் என்பதை வாசிப்பவர் மனதில் பதியுமாறு எழுதினேன். எழுதி முடித்து பல முறை வாசித்துப் பார்த்து திருத்தம் செய்தேன். திருப்தி வந்தது. நாவல் என்றால் தலைப்பு வேண்டுமே... "அ 20-நர்ம்ங்ற்ட்ண்ய்ஞ் இர்ர்ப் ஈன்க்ங்" என்ற தலைப்பினை வைத்தேன்.
சரி... எழுதி முடித்தாகிவிட்டது. அடுத்தது அதை புத்தகமாகப் பிரசுரிக்க வேண்டும். அப்போதுதானே ஒரு முழுமை கிடைக்கும். அதற்காக பல பதிப்பகங்களை நாடினேன். சில அத்தியாயங்களை பதிப்பகங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. பார்க்கப் பதிமூன்று வயதாகத் தோன்றும் ஒருத்தி எழுதிய காதல் கதையை பிரசுரிக்க யாரும் முன் வரவில்லை.
பதினெட்டு வயதுக்காரிக்கு காதலைப் பற்றி என்ன தெரியும், கணினி யுகத்தில் நாவல் எடுபடுமா என்றெல்லாம் கமெண்டுகள் வந்தன. இவர்களின் மனோபாவத்தை மாற்ற வேண்டும். நாவலின் அட்டையைப் பார்த்து புத்தகத்தின் உள்ளடக்கத்தை எடை போடுவது கூடாது என்று உணர்த்த வேண்டும் என தீர்மானித்தேன்.
ஒரு வழியாக டெல்லியைச் சேர்ந்த "லைபி பதிப்பகம்' எனது நாவலை பிரசுரிக்க முன்வந்தது. சென்ற ஆண்டு பிரசுரமும் ஆனது. டெல்லி புத்தக விழாவில் எனது நாவலுக்கு நல்ல வரவேற்பு. நான் படைத்த கதா பாத்திரங்கள், எனது முயற்சிகள் என்னைக் கை விடவில்லை. பத்திரிகைகள் எனது நாவலைப் பாராட்டின. "" நம்பிக்கை தரும் இந்தியாவை உங்கள் நாவல் அடையாளம் காட்டியிருக்கிறது'' என்று இந்திய வெளியுறவுத் துறை என்னைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தது. அந்த அங்கீகாரம் கிடைத்ததில் நான் லேசாகிப் போனேன். சந்தோஷத்தில் மூழ்கினேன்.
சாதனைகளை எந்த வயதிலும் செய்யலாம். சொற்களால் ஜோடனை செய்யாமல், வாசகர்கள் சட்டென்று புரிந்துகொள்ளும் படி எளிய மொழி நடையில் எழுதினால் எழுத்துலகில் வெற்றி பெறலாம்'' என்கிறார் நட்சத்திர எழுத்தாளராக மாறிப்போன திவ்யாஷா. திவ்யா ஷா மேற்படிப்பிற்காக விரைவில் பாரீஸ் போகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.