தீபாவளி பட்சண டிப்ஸ்!

முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சீடை போன்றவை மொறு மொறுப்பாக இருக்க சிறிது கார்ன் ஃபிளவர் மாவு சேர்த்துப் பிசைந்து செய்யலாம்.
தீபாவளி பட்சண டிப்ஸ்!
Updated on
1 min read

* முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சீடை போன்றவை மொறு மொறுப்பாக இருக்க சிறிது கார்ன் ஃபிளவர் மாவு சேர்த்துப் பிசைந்து செய்யலாம்.
* எந்த பட்சணம் செய்யும்போதும் தூள் உப்பை நேரடியாக சேர்க்காமல் சிறிது தண்ணீர்விட்டு கரைத்து, தெளிந்தபின் ஊற்றிப் பிசையவும். 
* சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றை தயாரிக்கும்போது காரத்திற்கு மிளகாய்த்தூள் சேர்ப்பதற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்க்கலாம். காரமும் குறைவாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* முறுக்கு மாவு பிசையும்போது அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால் நெய்மணத்துடன் கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.
* பலகாரங்கள் செய்ய வாணலியில் எண்ணெய் ஊற்றியதும், இஞ்சி, வாழைப்பட்டை போன்றவற்றில் ஒன்றை சிறிய துண்டு எடுத்து நசுக்கி எண்ணெய்யில் பொரித்தெடுத்த பிறகு உபயோகித்தால், பலகாரம் அதிகம் எண்ணெய் குடிக்காது.  எண்ணெய்யும் பொங்கி வழியாது. எண்ணெய் புகையினால் வாந்தி, தலைச் சுற்றல் போன்றவையும் வராது.
* ஓமப்பொடி தயாரிக்கும் போது அரிசிமாவைக் குறைத்துப் போட வேண்டும். ( கடலை மாவிற்கு கால் கிண்ணம் அரிசி மாவு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.)
* பஜ்ஜி போடும்போது சமையல் சோடா போடாமல் கடலைமாவு இரண்டு பங்கு, அரிசிமாவு ஒரு பங்கு, பொட்டுக் கடலை மாவு ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் பஜ்ஜி நன்றாக உப்பி வரும். அதுபோன்று ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை காய வைத்து பஜ்ஜி மாவில் ஊற்றி பிறகு மாவைக் கரைத்து பஜ்ஜி சுட்டால் வாசனையாகவும், சாஃப்ட்டாகவும் இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.
* வடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும் போது கடைசியில் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுங்கள். முன்பே உப்பு சேர்த்து அரைத்தால் வடை மாவு சீக்கிரமே நீர்த்துவிடும். 
* வடை மாவு நீர்த்துவிட்டால் அத்துடன் கொஞ்சம் அவலைச் சேர்த்து வடைதட்டினால் மிருதுவாக இருப்பதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.
* ரிப்பன் பக்கோடா செய்யும் பொழுது, மூன்று கப் அரிசி மாவு, ஒரு கப் கடலைமாவுக்கு 100 கிராம் காய்ந்த மிளகாயை விழுதாக அரைத்து உப்பும், வெண்ணெய்யும் சேர்த்துப் பிசைந்து பொரித்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
* தீபாவளிக்கு செய்த காரப் பட்சணங்கள் நீண்ட நாட்களுக்கு சிக்குவாடை அடிக்காமல் இருக்க, ஒரு சிறு துண்டுத்துணியில் ஒரு கைப்பிடி கல் உப்பைப் போட்டு, ஒரு முடிச்சாகக்கட்டி பட்சணம் வைத்துள்ள பாத்திரத்தின் அடியில் போட்டு வைக்க வேண்டும்.
- எச்.சீதாலட்சுமி  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com