எளிய மருத்துவம்!

வெந்தயத்தை வேகவைத்து தேன் விட்டுக் கடைந்து உட்கொள்ள மார்பு வலி குணமாகும்.
எளிய மருத்துவம்!
Updated on
1 min read

டிப்ஸ்... டிப்ஸ்...

* வெந்தயத்தை வேகவைத்து தேன் விட்டுக் கடைந்து உட்கொள்ள மார்பு வலி குணமாகும்.
 - நெ.இராமன்

* தினசரி சிறுதுண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல்  ஆரோக்கியமாக இருக்கும்.
- கே. பிரபாவதி.

* வாரத்தில் இரண்டு நாள் வேப்பம் பூ ரசம்  செய்து உண்டு வர  வயிறு  உப்புசம், வாயுத் தொல்லை நீங்கும்.  அஜீரணக் கோளாறும் குணமாகும்.

* கேரட் சாறில் தேனும் காய்ச்சிய பாலும், கலந்து குடித்து வர நினைவாற்றல் பெருகும்.

* ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு, 1 சிட்டிகை மிளகுத்தூள், அரை தேக்கரண்டி தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர இருமல், மூச்சு வாங்குதல் 
குணமாகும்.

* இரவில் தூங்கச் செல்வதற்கு முன் மூக்கில் இரு சொட்டு கிராம்பு தைலம் விட்டால் குறட்டை ஒலி கட்டுப்படும்.  

* துளசி இலையை அரைத்து தேமலின் மீது பூசி வர, விரைவில் தேமல் குணமாகும்.

* குழந்தைகளுக்கு சளித் தொல்லை அதிகமாகி மூச்சுவிட சிரமப்பட்டால்,  இரவில்  படுக்கும் முன் 1 கரண்டி தேங்காய் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் ஒரு சிறிய துண்டு பூங்கற்பூரத்தை சேர்த்து இறக்கி அதில் வரும் புகையை குழந்தைகளை முகர சொல்லவும்.  பின்னர்,  தேங்காய் எண்ணெய்யை சூடு பொறுக்குமளவு எடுத்து மார்பு,  உள்ளங்கை, உள்ளங்காலில் நன்கு தேய்த்துவிட்டால்  மூச்சு திணறல் உடனடியாக கட்டுப்படும். சளித் தொல்லையும் குறையும்.

* துளசி இலையுடன் இளம் மஞ்சள் கிழங்கை வைத்து அரைத்து அந்த விழுதை  நல்லெண்ணெய்யில் வதக்கி பருக்களின் மீது வைத்து கட்டி வர விரைவில்  பருக்கள் மறையும். 

* வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரை சூப் செய்து உண்டு வர பார்வை கோளாறுகள் நீங்கும்.
 - என். சண்முகம்

* நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் நிற்கும்.

* செம்பருத்தி இலைகளை காய வைத்து தூள் செய்து, தினமும் இருவேளை உண்டு வர மலச்சிக்கல் தீரும்.

* வேப்பம்பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப் பூண் ஆறிவிடும்.

* வெந்தயத்தைப் பொடி செய்து மோரில் குடித்துவர வயிற்றுவலி நீங்கிவிடும்.

* ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆற வைத்து  வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 
- கீதா ஹரிஹரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com