

அமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் "இந்த உலகில் அழகான உடல் அமைப்பு கொண்ட பெண் யார்' என்று ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி முடிவும் வெளியாகியுள்ளது.
அந்த பெண் யார்..?
உலகில் இன்றைக்கு அழகான உடல் அமைப்புள்ளவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவர் இங்கிலாந்து மாடல் அழகி கெல்லி புரூக்.
உடல் அமைப்பு, கூந்தல், உயரம், எடை, முக அமைப்பு போன்ற அளவீடுகளின் அடிப்படையில் பல்வேறு ஆண், பெண்களிடம் கருத்துக் கணிப்பு நிகழ்த்தி... கணிப்பினை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து, எல்லா அளவீடுகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருப்பவர் கெல்லிதான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்து அழகினைக் கூட்டிக் கொண்ட அழகிகளை இந்த ஆய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை.
"இயற்கை அழகுடன், விஞ்ஞான பூர்வமான அளவீடுகளுடன் மிகவும் பொருந்தியிருப்பவர் கெல்லி புரூக்' என்று அந்த விஞ்ஞானிகள் குழு கெல்லியைப் பாராட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.