புதுசு

நடிகை ஸ்ரேயா சரண் இந்தோனேசியா சென்றுள்ளார். தண்ணீருக்கடியில் புகைப்படம் எடுப்பதில் நிபுணரான அனுப் ஜோசப் கட்டுக்காரன் இவரைப் பல்வேறு கோணங்களில் நீருக்கடியில் புகைப்படம் எடுக்க உள்ளாராம்.
புதுசு
Published on
Updated on
1 min read

நடிகை ஸ்ரேயா சரண் இந்தோனேசியா சென்றுள்ளார். தண்ணீருக்கடியில் புகைப்படம் எடுப்பதில் நிபுணரான அனுப் ஜோசப் கட்டுக்காரன் இவரைப் பல்வேறு கோணங்களில் நீருக்கடியில் புகைப்படம் எடுக்க உள்ளாராம்.

டென்னிஸ் சகோதரிகளில் செரினா வில்லியம்ஸ், வீனஸின் தங்கை. சில மாதங்களுக்கு முன்பு குழந்தைப் பெற்ற செரினா அமெரிக்கப் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் மாளிகையொன்றை வாங்கி இருக்கிறார். ஐந்து படுக்கை அறைகள், நீண்ட வெளிப்புற வராந்தா, நீச்சல் குளம், மதுக்கூடம், குளிர்காயும் அறை, யோகாவுக்கென தனியறை எனப் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்ட மாளிகை இதுவாம். தெரிந்த கொள்ளுங்கள்: செரினாவுக்கு ஏற்கெனவே பாம் பீச்சில் இரு வீடுகள், பாரிஸீல் ஒரு வீடு, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வீடு இருக்கிறதாம்

அனுஷ்கா ஷெட்டி நடித்துவரும் "பாக்மதி' பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். இந்தப் படத்தின் முதல் போஸ்டர் நவம்பர் 7-இல் வெளியாக இருக்கிறதாம். ஏன் நவம்பர் 7? அன்றுதான் அனுஷ்காவின் பிறந்தநாளாம்.


ஹேமாமாலினி நடித்த "சீதா அவுர் கீதா' 45 ஆண்டுகளுக்கு முன்பாக ரமேஷ் சிப்பி இயக்கி வெளிவந்த படம். வசூலிலும் சாதனைப் படைத்தது. பிறமொழிகளில் வெளிவந்தும் சாதனைப் படைத்தது. சமீபத்தில் ஹேமாவைச் சந்தித்த ரஷ்யர்கள், அந்தப் படம் குறித்து கருத்து வெளிட்டதும் அசந்து போனாராம் ஹேமா. ஆரம்பத்தில் ஹேமாமாலினியின் பாத்திரத்தில் மும்தாஜ் நடிக்க இருந்ததாகவும் அவரது தேதி கிடைக்காத காரணத்தினால் ஹேமாமாலினி நடித்ததாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுபடத்தில் நடிக்கத் தொடங்கும் முன் படத்தின் கதை, வசனம் தயார் என்றால் கொடுங்கள் படித்துப் பார்த்து முடிவு சொல்கிறேன் என நடிகர்கள் வீட்டுக்கு வாங்கிச் செல்வதுண்டு! ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் இதில் ஒரு படி மேல். புதுப்பட கதை, வசனத்துடன் நியூயார்க்குக்கு பறந்துவிடுவார். அங்கு அதனைப் படித்துப் பார்த்து மாற்றங்களைச் சொல்லவும் தயங்க மாட்டார். இப்படி இவர் தன் படங்களில் பலவற்றுக்கு உதவியுள்ளார்! மாற்றியுள்ளார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com