ஹிமாலயா கைப்பை

இந்தப் படத்தில் உள்ள கைப்பை அதிகபட்சமாக என்ன விலை போகும்? ஹேர்மிஸ் பிர்கின் நிறுவனத்தின் "ஹிமாலயா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைப்பை ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 
ஹிமாலயா கைப்பை

இந்தப் படத்தில் உள்ள கைப்பை அதிகபட்சமாக என்ன விலை போகும்? ஹேர்மிஸ் பிர்கின் நிறுவனத்தின் "ஹிமாலயா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைப்பை ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 
சமீபத்தில் ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் இந்தக் கைப்பை 3 லட்சத்து 80 ஆயிரம் டாலருக்கு விலை போயுள்ளது. இதற்கு முந்தைய சாதனை 3 லட்சம் டாலர்! 2016-ஆம் ஆண்டில் இது நிகழ்ந்தது.
இந்த கைப்பையின் சிறப்பு என்னவென்றால், இது நிலோ என்ற ஒருவகை முதலையின் தோலால் ஆனது. கைப்பிடியில் 205 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கைப்பிடியில் உள்ள கொக்கி 18 கேரட் தங்கத்தால் ஆனது. "ஹிமாலயா' என்று அழைக்கப்படுவதற்கு காரணம் இந்தப் பையின் நிறம். சாம்பல் புகை வண்ணத்தில், இமாலய வெள்ளிப் பனிமலைப் போல ஜொலிப்பதால் இந்தப் பெயராம்.
ஆனால் இந்த கைப்பைகளைத் தயாரிக்க முதலைகள் கொடூரமாகக் கொல்லப்படுவதாக இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com