3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை உபயோகிப்பவரா?

மாதவிலக்கை தள்ளிப்போட  மாத்திரைகளை பயன்படுத்துவரா நீங்கள்..? அப்படியென்றால் இதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை உபயோகிப்பவரா?
Updated on
1 min read


மாதவிலக்கை தள்ளிப்போட  மாத்திரைகளை பயன்படுத்துவரா நீங்கள்..? அப்படியென்றால் இதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

தெய்வ காரியங்கள் மற்றும் வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் நடைபெறும் சமயங்களில்  மாதவிடாயை தள்ளிப்போட  நினைப்பது இன்று வாடிக்கையாகிவிட்டது.  

இதற்காக உபயோகிக்கும் மாத்திரையில் உள்ள மூலப்பொருட்கள், உடலில் "புரோஜெஸ்ட்ரான்'  எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்துகிறது. இதனால் இயற்கையாக நிகழவேண்டிய மாதவிடாய் தள்ளிப்போகிறது. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளதை நீங்கள் உணரவேண்டும்.

உடலில் நீர் கோர்த்தல், தலைவலி, மார்பகங்களில் வலி, வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகிய பிரச்னைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14-ஆம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேற்றை தற்காலிகமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொருத்தவரை பாதுகாப்பான முறை என்று நீங்களாக முடிவு செய்து . மருந்து கடைகளில் வாங்கி சாப்பிட்டால், பக்க விளைவுகள் தவிர்க்க முடியாததாகிவிடும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலை என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், அடிக்கடி இது தொடர்ந்தால் பக்கவிளைவுகள் வரும் அபாயம் உண்டு என்பதை மனதில் நிறுத்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com