

இசுயசக்தி விருது!இல்லத்தரசிகளாக வீட்டில் இருந்தபடியே ஊறுகாய் தயாரிப்பது, கஞ்சி மாவு தயாரிப்பது, மசாலாப் பொடி வகைகள் தயாரிப்பது குளியல் சோப் தயாரிப்பது, பினாயில் தயாரிப்பது போன்ற தமிழகம் முழுவதுமுள்ள சிறு தொழில்கள் செய்து வரும் பெண்களை ஊக்குவிக்கும்விதமாகவும் , அவர்களை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டும்விதமாகவும் "சுய சக்தி 2018' விருது வழங்குகின்றனர் ஏற்கெனவே தொழில் முனைவோராக தங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்களான சவேரா ரெஸ்டாரண்ட் தலைவர் நீனா ரெட்டி, லதா பாண்டியராஜன், நேச்சுரல்ஸ் வீனா குமரவேல், அவதார் சவுந்தர்யா ராஜேஷ், ரோகிணி மணியன், பூர்ணிமா ராமசாமி, சமூக சேவகி அருணா சுப்பிரமணியன், திரைப்பட இயக்குநர் புஷ்கர் காயத்திரி ஆகியோர். இதுகுறித்து சவுந்தர்யா ராஜேஷ் கூறுகிறார்:
""பெண்கள் சுயசக்தி விருது என்பது இந்த விருதின் பெயர். இதன் மூலமாக வீட்டிலிருந்தபடியே சிறு தொழில்கள் செய்யும் பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களை வெளிவுலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவும் இந்த விருதினை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த விருதினை கடந்த ஆண்டுதான் தொடங்கினோம். கடந்த ஆண்டு சோஷியல் மீடியாக்கள் மூலம் அறிவித்திருந்தோம்.
நாங்கள் எதிர்பார்க்காத அளவு வயது வரம்பில்லாமல் இந்த விருதுக்காக பெண்கள் பதிவு செய்திருந்தனர். இவ்வளவு பெண்கள் சிறுதொழிலில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று ஆச்சர்யப்பட்டுபோனோம். இவர்கள் எல்லாரும் என்ன மாதிரியான சிறு தொழில்கள் செய்கிறார்கள் என்றால், ஊறுகாய் செய்வது, கஞ்சி மாவு தயாரிப்பு, கெமிக்கல் இல்லாத சோப் செய்பவர்கள், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்காக வேலையைவிட்டுவிட்டு விட்டிலிருந்து சிறு தொழில்கள் செய்பவர்கள், வீட்டில் இருந்துகேட்டரிங் செய்பவர்கள், குழந்தைகள் காப்பகம் வைத்திருப்பவர்கள் என பலவிதமான சிறு தொழில் செய்பவர்களும் பதிந்திருந்தார்கள். அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து விருது வழங்கினோம். இந்த விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தேர்வாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்கும் அவர்களுடைய தொழிலை விரிவு படுத்தவும், மேம்படுத்தவும் நிறைய ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் அவர்களுக்கு கிடைத்தது.
அப்போதே முடிவு செய்துதோம், அடுத்த ஆண்டும் இந்த சுயசக்தி விருதினை தொடர்வது என்று. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான சுய சக்தி விருது 2018}க்கான விருது அறிவித்திருக்கிறோம். அதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வழங்கி வருகிறோம். ஜுலை 5 }ஆம் தேதி வரை படிவங்கள் அனுப்பலாம். இதில் சிறுதொழில் செய்யும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அது என்ன சிறு தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம். படிப்பு தகுதியோ, வயது வரம்போ எதுவும் இல்லை. அது போன்று உங்கள் இல்லத்திற்கு அருகில் வீட்டில் இருந்தபடி சிறுதொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுக்காக மற்றவர்களும் பதிவு செய்யலாம்.
இந்த விருதிற்கான ஒரே ஒரு விதிமுறை சிறு தொழில் செய்பவர்கள் நிச்சயமாக பெண்களாகதான் இருக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்யும் பெண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளமுடியும். உதாரணமாக, டியூஷன் எடுப்பவர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், மருதாணி இடுபவர்கள் போன்றோரும் இந்த விருதில் கலந்து கொள்ளலாம். பெண்கள் எப்படி தங்கள் திறமையை உபயோகித்து சம்பாதிக்கிறார்கள் என்பதை மட்டும்தான் நாங்கள் பார்க்கிறோம். குறைந்தது ஆறு மாதமாவது அந்த தொழிலில் ஈடுப்பட்டிருக்க வேண்டும். அவர்களது உற்பத்தி பொருள்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை தான் இந்த விருதுக்கான தகுதிகள்.
எங்கள் குழுவில் 12 பேர் ஜூரி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூரி உறுப்பினர்களாக இருந்தவர்களில் இந்த ஆண்டும் சிலர் இருக்கின்றனர். புது உறுப்பினரும் இருக்கிறார்கள். இவர்கள் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலமாக பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறவும். அவர்கள் தொழிலை எப்படி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போக முடியும். இதுவே, இந்த சுயசக்தி விருதின் நோக்கம்'' என்கிறார் சவுந்தர்யா ராஜேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.