மூன்று அடி அதிசயம்!
ஆர்த்தி டோக்ரா. மூன்று அடி இரண்டு அங்குல உயரம். இன்று ஆர்த்தியை இந்தியாவே அதிசயமாக ஆச்சரியமாக ஒரு சாதனைப் பெண்ணாகப் பார்க்கிறது.


ஆர்த்தி டோக்ரா. மூன்று அடி இரண்டு அங்குல உயரம். இன்று ஆர்த்தியை இந்தியாவே அதிசயமாக ஆச்சரியமாக ஒரு சாதனைப் பெண்ணாகப் பார்க்கிறது. காரணம் பிறப்பிலேயே உயரம் குறைந்தவராகப் பிறந்த ஆர்த்தி, இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தின் ஆட்சியராக பணி புரிகிறார்.
"மாற்றுத் திறனாளியாக இருந்த என்னை நாலு பேர் பாராட்டும்படி செய்தவர்கள் எனது பெற்றோர்தான். அப்பா இந்திய ராணுவத்தில் கர்னலாகப் பணி புரிந்தார். அம்மா பள்ளியின் முதல்வர். என்னைப் பார்த்த டாக்டர்கள் சிறப்பு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஆனால் பெற்றோர் பொதுவான பள்ளியில் சேர்த்துவிட்டனர். நான் பெற்றோருக்கு ஒரே குழந்தை. "என்னது... ஒரே குழந்தையா.. மகன் வேண்டாமா..' என்று அம்மாவிடம் அநேகர் கேட்பார்கள். "ஆர்த்தி எங்களுக்குப் போதும் ..' என்று அம்மா சொல்வார். மாற்றுத்திறனாளிகள் சாதிப்பது அவர்கள் பெற்றோரைப் பொறுத்த விஷயம். சில பெற்றோர் தங்களுக்குப் பிறந்த மாற்றுத்திறனாளி பிள்ளைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். பொருளாதாரமும் ஒரு காரணம். நான் ஒரு மாற்றுத்திறனாளியென்று என்னை எனது பெற்றோர் நினைக்கவிடவில்லை. அப்பா எல்லை பகுதியில் பணிபுரிந்தார். அம்மாதான் என்னை கண் போல பார்த்துக் கொண்டார். தில்லியில் மேல்படிப்பு படித்தேன். 2006-இ ல் ஐஏஎஸ் தேர்வினை எழுதி முதல் முயற்சியில் தேர்வு பெற்றேன். ஐஏஎஸ் பதவிக்குத் தகுதியானேன். ராஜஸ்தானில் பல இடங்களில் பணி புரிந்துவிட்டு அஜ்மீர் வந்திருக்கிறேன்..' என்கிறார் ஆர்த்தி டோக்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...