முடி அடர்த்தியாக வளர சில குறிப்புகள்!

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
முடி அடர்த்தியாக வளர சில குறிப்புகள்!
Published on
Updated on
1 min read

* ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
* வாரம் ஒரு முறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
* வாரம் ஒருமுறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
* கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் -4 இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் கூந்தல் கருமையான நிறத்துடன் வளரும்.
* கடுக்காய், செம்பருத்திப் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல் தடவி நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காய்ப் பொடி, தான்றிக்காய்ப் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலைப் பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா பத்து கிராம் சேர்த்து எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெய்யில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத்துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகவும், அடர்த்தியாக வளரும்.
* மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஊற விட்டு பின்பு தலைக்குத் தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.
* செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் தலை "ஜில்'என்று இருக்கும். தலைமுடி புசு புசு வென அதிகம் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகும்.
* மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெய்யில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊற விட்டு அதை நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
(எளிய அழகு குறிப்புகள் - நூலிலிருந்து)
- சி.பன்னீர்செல்வம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com