ஆரஞ்சுப் பழத்தோலைக் காய வைத்து, பொடி செய்து பின் பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.
தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டித் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
வேப்பிலை, புதினா, குப்பைமேனி இலைகளை காயவைத்து, பொடி செய்து கொண்டு, பின்னர் பாலில் குழைத்து முகத்தில் பூசி, இருபது நிமிடங்கள் ஊறவிட்டு கழுவினால் நாளடைவில் கருமை நீங்கிவிடும்.
ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து பயத்தமாவு போட்டு கழுவ வேண்டும், வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்துவந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம் மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.
புதினாச்சாறு, எலுமிச்சைச் சாறு, பயத்தம் மாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவிவிட்டு, ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும்.
(நலம் தரும் எழில் இயற்கை
மருத்துவம் என்ற நூலிருந்து)
- சு. பொன்மணி ஸ்ரீராமன்,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.